மேலும் அறிய

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை.. ஆனால், இசைவாணியை பிடிக்க ஆர்வம் காட்டாத காவல்துறை - ஹெச்.ராஜா

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள் தானே இவர்கள், அப்ப ஏன் இந்த இசைவாணியை கைது செய்யவில்லை, காவல் துறையே ஹிந்து விரோதமாக இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தேசிய, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை.. ஆனால், இசைவாணியை பிடிக்க ஆர்வம் காட்டாத காவல்துறை - ஹெச்.ராஜா

அதனை தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பாஜகவின் உட்கட்சி தேர்தல் தொடர்பான கருத்தரங்கள் நடைபெற்றது. கிளை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது அது 30ஆம் தேதி வரை நடக்கும், டிசம்பர் 1 முதல் நகர், ஒன்றிய கமிட்டிகளுக்கான தேர்தல் நடக்கும், டிசம்பர் 16 முதல் 30 வரை மாவட்ட தலைவர் உள்ளிட்ட கமிட்டிக்கான தேர்தல் நடக்கும், ஜனவரி முதல் வாரத்தில் மாநில தேர்தல், ஜனவரி 15ம் தேதிக்குள் தேசிய தலைவர் தேந்தெடுக்கப்படுவார்கள். தை பிறக்கும் போது பாஜகவின் தேசிய தலைவர் கமிட்டி வரும். அதற்கான பயிலரங்கள் தான் இங்கு நடந்து இருக்கிறது. 

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை.. ஆனால், இசைவாணியை பிடிக்க ஆர்வம் காட்டாத காவல்துறை - ஹெச்.ராஜா

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலார்ட் விடப்பட்டிருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில அரசு இதுவரை வெள்ளம் என்றால் சென்னை மட்டும் என்று கவலை பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த மாதம் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஆகவே, எல்லா மாவட்டங்களிலும் கனமழைக்கான எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு மீட்பு, மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக கேட்டுக் கொள்கிறது. உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். 

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை.. ஆனால், இசைவாணியை பிடிக்க ஆர்வம் காட்டாத காவல்துறை - ஹெச்.ராஜா

சமூக வலைதளங்களில் ஹிந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்க விசயமாகும், அதுவும் கார்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து சபரிமலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஐயப்பனை பற்றி கேலியும், கிண்டலுமாக இசைவாணி, இயக்குநர் ரஞ்சித் போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. பலபேர் என்னிடம் ஐயப்பனை பற்றி பேசினால், நான் ஏசுவை பற்றி பேசுவேன் என்கிறார்கள். நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை.. ஆனால், இசைவாணியை பிடிக்க ஆர்வம் காட்டாத காவல்துறை - ஹெச்.ராஜா

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள் தானே இவர்கள், அப்ப ஏன் இந்த இசைவாணியை கைது செய்யவில்லை, காவல் துறையே ஹிந்து விரோதமாக இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. அரசாங்கம் இந்து விரோதம் என்பது நமக்கு தெரியும். மாநிலத்தின் துணை முதலமைச்சர் சனாதான ஹிந்து மதத்தை டெங்கு கொசு போல், மலேரியா கொசு போல் அழிக்க வேண்டும் என பேசி இருக்கிறார். நாளைக்கு மற்ற மதங்களை பற்றி பாட்டு போடுவது, டான்ஸ் ஆடும் சூழ்நிலை வந்தால், தமிழ்நாட்டில் மத மோதல்கள் தான் வரும். காவல் துறை உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை.. ஆனால், இசைவாணியை பிடிக்க ஆர்வம் காட்டாத காவல்துறை - ஹெச்.ராஜா

இதுவரை மஹாராஷ்டிராவில் 200 தொகுதிகளுக்கு மேல் எந்த கட்சியும் வெற்றி பெற்றது இல்லை. ஆனால், இன்று 288க்கு 233 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மஹாராஷ்டிராவில் வெற்றி கிடைத்து இருக்கிறது. வங்கதேசத்தில் அரசாங்கம் மின்சாரத்திற்கு காசு கொடுக்கவில்லை, அதனால், இவர்கள் மின்சாரத்திற்கான பில்லை கொடுக்கவில்லை என அமெரிக்கா நிர்பந்தப்படுத்தியும், அதானி தயாராக இல்லை, நீங்க பயன்படுத்திய மின்சாரத்திற்கு பணம் கேட்டார். கொடுக்காததால் வங்கதேசத்திற்கு மின்சாரத்தை நிறுத்தியதால், இது போன்ற ரிப்போர்ட் வந்துள்ளது. அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை.. ஆனால், இசைவாணியை பிடிக்க ஆர்வம் காட்டாத காவல்துறை - ஹெச்.ராஜா

4 மாநிலங்களில் அதானி இந்த சூரிய மின்சாரத்தை ஒப்பந்தம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்பது புகார். இதில் தமிழ்நாடு முதலிடம், அடுத்து ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா இதில் பிஜேபி மாநிலம் இருக்கா, இல்லை. இதில் கைது நடவடிக்கைகள் எடுத்தால் தமிழக முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசோ அல்லது ஊடக நண்பர்களோ கேட்கிறீர்களா என்பது எனக்கு தெரியவில்லை. தமிழகமும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மாநிலங்கள் பாஜக இல்லை, அதனால் பாஜகவிற்கு எந்த பங்களிப்பும் இல்லை. அமெரிக்க கோர்ட் என்ன சொல்லுதோ அதற்கு கட்டுப்பட்டவர் அதானி, பிஜேபி சம்மந்தப்படுத்தி, பிரதமர் வாயை திறக்கவில்லை என்பது தேவையற்றது. அதானியே குற்றசாட்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Embed widget