மேலும் அறிய
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 2 ஆயிரம் நிவாரணம் – இழப்பீடை அறிவித்தது தமிழக அரசு
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு – பெரும் பரபரப்பு
- ஃபெஞ்சல் புயலால் வீடு, ஆடு மற்றும் மாடுகளை இழந்தவர்களுக்கும் இழப்பீடு
- விழுப்புரத்தில் படிப்படியாக வெள்ள நீர் வடிந்தாலும் பல பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் கிடைக்கவில்லை
- தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக இன்று கார்த்திகை தீபம் திருவிழா
- கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், பாண்டிச்சேரியிலும் இன்னும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை
- பேரிடர் காலத்தில் தற்காலிக நிவாரணம் கொடுப்பதுதான் தீர்வா? தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் பேச்சு
- மகாராஷ்ட்ராவில் நாளை ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.! இன்னும் முடிவாகாத முதலமைச்சர்? ஷிண்டே – பட்னாவிஸ் திடீர் சந்திப்பு
- கலவரத்தால் சம்பல் பகுதிக்குச் செல்லும் ராகுல், ப்ரியங்கா – பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
- பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது – மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
- நெல்லையில் தரமற்ற மாத்திரைகள் விற்பனை; தனியார் மருத்துவமனை மீது நோயாளிகள் புகார்
- மகளிர் முன்னேற்றத்தை மத்திய அரசு விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
- சென்னை அம்பத்தூரில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
- வங்கதேச இந்துக்களால் பதற்றம்; இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்
- பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
14:14 PM (IST) • 04 Dec 2024
உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10:55 AM (IST) • 04 Dec 2024
சம்பல் மசூதி விவகாரம்; உத்தரபிரதேசத்திற்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
சம்பல் மசூதிக்கு செல்ல முயற்சித்த காரணத்தால் உத்தரபிரதேசத்திற்குள் செல்ல ராகுல்காந்திக்கு அனுமதி மறுத்து எல்லையிலே கார் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















