(Source: ECI/ABP News/ABP Majha)
Karunanidhi death anniversary: கலைஞர் கருணாநிதி நினைவு தினம்; முதலமைச்சர், தி.மு.க.வினர் நினைவிடத்தில் மரியாதை!
Karunanidhi death anniversary: கலைஞர் கருணாநிதி நினைவு தினம்; முதலமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. கட்சி தலைவருமான மு.கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்திருக்கும் கருணாநிதி சிலையில் தொடங்கி, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் மெரீனாவில் அமைந்திருக்கும் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்தினர்.
கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, அரசினர் தோட்டத்தில் இருந்து மெரீனா வரை மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, ஆர்.ராசா., தயாநிதி மாறன், எம்.எல்.ஏ. உதயநிதி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே. சேகர் பாபு, உள்ளிட்ட பலரும் இந்த அமைதிப் பேரணியின் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கருணாநிதியின் நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி!https://t.co/wupaoCQKa2 | #Karunanithi #DMK #MKStalin pic.twitter.com/kobGpSJECm
— ABP Nadu (@abpnadu) August 7, 2022
சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு மு.க. ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இதில் பொது மக்களும், தி.மு.க.வினரும் பங்கேற்றனர்.
அமைதிப் பேரணியின் இறுதியாக மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கடல் அலை போன்று அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம்!https://t.co/wupaoCQKa2 | #Karunanithi #DMK #MKStalin pic.twitter.com/rnp9ACcFLR
— ABP Nadu (@abpnadu) August 7, 2022
கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தி.மு.க. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மரியாதனை செய்தனர்.
முன்னதாக, பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளி வளாகத்தில், கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார்.
மேலும், பெசன்ட் நகரில் கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்