மேலும் அறிய
Advertisement
பைந்தமிழ் எழுத்துக்களால் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓவியமாக வரைந்த காஞ்சிபுரம் இளைஞர்...!
அன்பின் வழியது உயர்நிலை என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துக்களால் ஓவியக்கலையாக மாற்றிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என முதல்வர் வாழ்த்து
காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சேர்ந்த சுந்தர்-முருகம்மாள் தம்பதியினர். இவர்களது இளைய மகன் கணேஷ் (25) சிவில் டிப்ளமா படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் மீது ஆர்வம் கொண்டிருந்த கணேஷ் தனது நண்பர்கள் உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் என அனைவருக்கும் ஓவியங்களை வரைந்து கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஓவியத்தின் மீது உள்ள தனியாத தாகத்தால் தொழிற்சாலை பணியிலிருந்து வீடு திரும்பி ஓய்வு நேரங்களில் தொடர்ந்து சார்கோல் ஆர்டிஸ்ட் எனும் பென்சில் வரைவு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதை நினைவு கூறும் வகையில் இளைஞர் கணேஷ், முவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போது வரை பயன்படுத்தும், தமிழ் எழுத்துக்கள் 247, மற்றும் தமிழ் வட்டெழுத்துக்கள், உள்ளிட்ட 741 எழுத்துக்களால் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் உருவத்தை தத்ருபமாக ஓவியமாக வரைந்திருந்தார்.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து இருந்த நிலையில், இதனை ட்விட்டர் பக்கத்தில் பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்பின் வழியது உயர்நிலை என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துக்களால் ஓவியக்கலையாக மாற்றிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வள்ளுவம் போல் இந்த ஓவியம் வாழும் என இளைஞர் கணேஷ் வாழ்த்தினார். மேலும் இது குறித்த இளைஞர் கணேஷ் தனது சமூக வலைதளங்களில், முதல்வரிடம் இப்புகைப்படத்தை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இளைஞர் கணேஷ், திருவள்ளுவர் புகைப்படத்தை முதல்வருக்கு பரிசளித்தார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்த திமுகவின் 100 நாள் சாதனை போற்றும் விதமாக முதல்வர் பாராட்டுக்கள் பெற்ற ஓவியர். கி.மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை (தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து) 741 எழுத்துக்களால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வரைந்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கணேஷ் 100 நாள் ஆட்சியை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கணேஷ் தெரிவிக்கையில், நான் பதிவு செய்த புகைப்படத்தை மு.க. ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த நினைத்துப் பெருமையாக இருந்தது . இதனைத் தொடர்ந்து முதல்வரிடம் நேரில் சந்தித்து அந்த புகைப்படத்தை அவருக்கு பரிசளித்தேன். இந்நிலையில் ஸ்டாலினின் 100 நாள் சாதனை பாராட்டுவதற்காக தாம் இந்த புகைப்படத்தை இரண்டு நாட்கள் செலவு செய்து குறைந்ததாக தெரிவித்தார். இந்தப் புகைப்படத்தை திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்க முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் பாராட்டுக்கள் பெற்ற ஓவியர், என்னுடைய அடுத்த ஓவியம். கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை
தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து 741 எழுத்துக்களால் முதலமைச்சர் அவர்களுக்கு இந்த ஓவியம் வரைந்தேன்@Udhaystalin அண்ணா விடம் கொடுக்க ஆசைப்படுகிறேன் pic.twitter.com/BU8Lh5PcwX
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion