மேலும் அறிய

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பள்ளி நிர்வாகத்தினர் 5 பேருக்கு கூடுதலாக 15 நாட்கள் நீதிமன்ற காவல்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பள்ளி நிர்வாகத்தினர் 5 பேருக்கு கூடுதலாக 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு தலைமை நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கபட்டனர். இவ்வழக்கு விசாரனை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருவதால் ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர்.

இந்நிலையில் 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்ககோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் மனு கடந்த 29 ஆம் தேதி  தாக்கல் செய்யப்பட்டபோது மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் நகலை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த மனுவை ஏற்க முடியாது எனவும் வழக்கு சிபிசிஐடி வசம் வழக்கு சென்றுவிட்டதால் சிபிசிஐடி பதிவு செய்த க்ரைம் நம்பரை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு கூறி 1 ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சாந்தி, சிபிசி ஐடி போலீசாரின் விசாரனை முழுமை பெறாததாலும்,  மாணவியின்  உடலை இருமுறை உடற்கூறு ஆய்வு செய்த அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ குழு ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்த பிறகு விசாரணை செய்யப்படுமென்று கூறி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கடந்த ஒன்றாம் தேதியன்று இறந்த மாணவியின் தாயார் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு மாணவியின் உடலை இரு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை கள்ளக்குறிச்சி மருத்துவகுழுவினர் ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்யும் குழுவிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரனை இன்று விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்த க்ரைம் எண்ணை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு கூறி முக்கால் மணி நேரம் வழக்கினை ஒத்திவைத்து மீண்டும் விசாரனைக்கு எடுத்துகொண்டார். அப்போது ஜிப்மர் மருத்துவ குழு இரண்டு முறை செய்யப்பட்ட உடற்கூறு ஆய்வின் அறிக்கையை ஆய்வு செய்து தாக்கல் செய்யும் அறிக்கையை கொண்டு தான் க்ரைம் எண் கொடுக்க முடியும் என தெரிவித்தால் வழக்கு விசாரனையை  வருகின்ற 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும், பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கைது செய்யப்பட்ட கணித ஆசிரியை கிருத்திகாவிற்கு சேலம் மத்திய சிறையில் கொலை மிரட்டல் இருப்பதாக கூறியும் திருச்சி சிறைச்சாலைக்கு மாற்ற கோரி ஆசிரியையின் தந்தை ஜெயராஜ் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேருக்கும் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா 5 பேருக்கும் கூடுதலாக 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க இன்று உத்தரவிட்டார். பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் ஜாமின் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget