Kallakurichi Illicit Liquor: ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு...
Kallakurichi Illicit Liquor Death: கள்ளச்சாரயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட 13 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட 13 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 16 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று காலை அடுத்தடுத்து பிரவீன், சுரேஷ், சேகர், சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் பெயர்கள் :
சேலம் மருத்துவமனை
11. நாராயணசாமி
12. ராமு
13. சுப்பிரமணி
உயிரிழந்த 5 பேரும், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம் என தவறான தகவல் பரப்பப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் குடிப்பழக்கமே இல்லாதவர். எனவே, தவறான தகவலை பரப்ப வேண்டாம். கள்ளச்சாராயம் அருந்தியதாக போலீசாரோ, மருத்துவர்களோ உறுதிப்படுத்தவில்லை. வயிற்றுப்போக்கு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தபிறகே இந்த தகவலை கூறுகிறேன். இவ்வாறு அவர் விளக்கமளித்திருந்தார்.
சாராய வியாபாரி கைது
இந்நிலையில், கண்ணுக்குட்டி என்ற சாராய வியாபாரி உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும், எஸ்பி ஆகியோர் நேரில் விசாரணை நடத்துகின்றனர் எனக்கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.