Kallakurichi Hooch Tragedy :அதிகாலையில் 5 பேர்; மொத்தம் 50 பேர் - கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Kallakurichi Hooch Tragedy :அதிகாலையில் 5 பேர்; மொத்தம் 50 பேர் - கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம் Kallakurichi Hooch Tragedy : The death toll in the Kallakurichi poaching incident has risen to 45 Kallakurichi Hooch Tragedy :அதிகாலையில் 5 பேர்; மொத்தம் 50 பேர் - கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/21/e5010a796017a0cbb53f4858ed66803d1718934515926571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 42 பேர் இந்த கள்ளச்சாராயத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று அதிகாலை உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது.
எங்கெங்கு எவ்வளவு உயிரிழப்பு பதிவு..?
கடந்த 3 நாட்களில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 3 பேர் என ஆரம்பித்த உயிரிழப்பு தற்போது வரை 50 ஐ தொட்டுள்ளது. மேலும், இந்த கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை மோசமாகி வருவதால், உயிரிழப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 28 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும் என மொத்தமாக 50 பேரை காவு வாங்கியுள்ளது இந்த கள்ளச்சாராயம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்:
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது நாகபிள்ளை, பாலு வீரமுத்து, ராஜேந்திரன்- s/o கோவிந்தராஜன், ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை சேலத்தில் மொத்தமாக 15 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 32 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)