மேலும் அறிய

Magalir Urimai Thogai LIVE:மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார் எம்.பி கனிமொழி..

Kalaignar Magalir Urimai Scheme: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாதம் ரூ.1000 வழங்கும் அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. 

LIVE

Key Events
Magalir Urimai Thogai LIVE:மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார் எம்.பி கனிமொழி..

Background

தமிழ்நாட்டின் இல்லத்தரசிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாதம் ரூ.1000 வழங்கும் அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. 

பெண்களை கவர்ந்த திமுக தேர்தல் வாக்குறுதி

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நிதிச்சுமை காரணமாக இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதால் இத்திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என அழைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 

விறுவிறு முன்னேற்பாடுகள்

இதனிடையே இந்த திட்டத்தில் தகுதியுள்ள குடும்ப பெண்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. ரேஷன்கடை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களால் வீடு,வீடாக சென்று விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு 3 கட்ட முகாம்கள் நடத்தி பெறப்பட்டது. பின்னர் இவற்றின் உண்மைத்தன்மை அறிய ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொடுக்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்டது.

திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியுள்ள குடும்ப பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்குக்கு ரூ.1, 10 பைசா அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அதேசமயம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன காரணம் என்பது குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும். 

சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றே பல பெண்களின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டு இன்ப அதிர்ச்சி அளித்தது தமிழ்நாடு அரசு. 

முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அதற்கான ஏடிஎம் கார்டுகளையும் வழங்குகிறார். அங்குள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர்கள், எம்,எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர். சுமார் 10 பயனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. முதலமைச்சர் வருகையால் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

திமுக முப்பெரும் விழா

ஆண்டுதோறும்  அண்ணா பிறந்த நாள் (செப்.15),  பெரியார் பிறந்த நாள் (செப். 17  மற்றும் திமுக  தோற்றுவிக்கப்பட்ட நாள் (செப்.17) ஆகியவை சேர்த்து திமுக  சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கருணாநிதி நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 17 ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது.

அந்த விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகளை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்க உள்ளார். இந்தாண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திமுக தோற்றுவிக்கப்பட்டு பவள விழா ஆண்டு ஆக கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

 

14:10 PM (IST)  •  15 Sep 2023

தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார் எம்.பி கனிமொழி..

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி மகளிருக்கு உரிமைத்தொகை பெறுவதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கி, விழாவில் சிறப்புரையாற்றினார்.

11:37 AM (IST)  •  15 Sep 2023

அன்பின் வடிவம் எனது மகள் செந்தாமரை.. முதலமைச்சர் ஸ்டாலின்..

அடுத்து என்னுடைய மகள் செந்தாமரை. அன்பின் வடிவம் அவர். நான் எந்த பொறுப்பில் இருந்தாலும் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என இருப்பார். ஒரு அரசியல்வாதியின் மகள் என்னுடைய சாயல் தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். சுயமாக வரவேண்டும் என நினைப்பவர். அந்த வகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். கருணைமிகு தாய், தூணாக விளங்கும் மனைவி, தன்னம்பிக்கை கொண்ட மகள் என இந்த மூன்றும் எனக்கு கிடைத்துள்ளது. இதே மாதிரி குணம் கொண்டவர்கள் தான் மகளிர் அனைவரும்.

11:35 AM (IST)  •  15 Sep 2023

மிகப்பெரிய சக்தியாக இருப்பது துர்கா தான் - முதலமைச்சர் ஸ்டாலின் உரை..

திருமணமாகி 5வது மாதத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டு நான் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என சொல்லி தன்னை பக்குவப்படுத்தி கொண்டார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள். எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னோட மிகப்பெரிய சக்தியாக இருப்பது துர்கா தான். 

11:29 AM (IST)  •  15 Sep 2023

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் உரை..

எனது அரசியல் வாழ்க்கையில் தொடக்க காலக்கட்டத்தில் சிறு சிறு சம்பவங்கள் கூட என் அம்மாவிடம் சொல்லி தான் கலைஞர் கிட்ட சொல்லுவேன். இன்னைக்கு அவங்க வயது முதிர்ந்த நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை போய் பார்க்கும்போதெல்லாம் அவரின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் தான் என்னுடைய மனைவி துர்காவும், என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு என்னுடன் இருக்கிறார்கள். 

11:19 AM (IST)  •  15 Sep 2023

குழந்தை திருமணம் பற்றி ஆளுநர் ரவியின் பேச்சுக்கு - முதலமைச்சர் சூசக பதில்..

பெண்களை அடக்கி ஒடுக்குவதை எதிர்ப்பதால் திமுகவை கண்டு சிலருக்கு எரிச்சல் என முதலமைச்சர் ஸ்டாலின் குழந்தை திருமணம் பற்றிய ஆளுநர் ரவியின் பேசுக்கு சூசகமாக பதிலளித்துள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget