மேலும் அறிய

Annamalaai: பட்டமளிப்பு விழாவிலும் அரசியலா? - பொன்முடிக்கு அண்ணாமலை பதிலடி!

K Annamalaai:மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறிய கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் கே. அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழத்தின் பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியலா? மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறிய கருத்து குறித்து விளக்கம் அளிப்பது கடமை என்று குறிப்பிட்டு, பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை ஆற்றினார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர், துணை வேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இந்நிலையில், நிகழ்ச்சியில்  மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் என்ணிக்கை அதிகம் என்று கூறியிருந்தார். இதற்கு விளக்கம் தரும் வகையில், கே. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், 2015 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மத்திய அரசு ரூ.3,96,942 மதிப்பில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாக கருதுகிறோம்.

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம் என்றார். உண்மைதான். அது இன்று மட்டுமல்ல, 1967 க்கு பின்பு மட்டுமல்ல, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அறிவாற்றலில் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர் நமது முன்னோர்கள்.

மேற்கத்திய கல்வி முறையே தமிழகத்தின் கல்வியின் தொடக்கம் என்று நம்பும் சிலரின் கவனத்திற்கு: 1800களின் தொடக்க காலத்திலேயே, திராவிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் வருவதற்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் கல்வி பயின்று வந்துள்ளனர் என்பதற்கான சான்று உள்ளது.

ஆனால் இன்றோ, தமிழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்ற உண்மையை அமைச்சர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம். தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டு 1.65,417 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2020ஆம் ஆண்டு அது 85,747 ஆக குறைந்துவிட்டது. சுமார் 50 சதவீத வீழ்ச்சி.

மேலும், 2021 ஆம் ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வில் வெறும் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வந்தது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழக பொறியியல் கல்லூரியில் நுழைவோர் எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதன் வெளிப்பாடாகவே இது தெரிகிறது.

தனது உரையை முடிக்கும் போது உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமகிர சிக்ஷா நிதி மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 6,664 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 3,96,942 மாணவர்களுக்கு PMKVY திட்டத்தின் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

மீண்டும் ஒருமுறை, எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தமிழக அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்!

இவ்வாறு அவர் தெரிவித்தார்,

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ABP Premium

வீடியோ

Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Honda Activa vs Yamaha Fascino 125..! இரண்டு ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? விலை, மைலேஜ் எவ்வளவு?
Honda Activa vs Yamaha Fascino 125..! இரண்டு ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? விலை, மைலேஜ் எவ்வளவு?
Hero Splendor on EMI: ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
Embed widget