(Source: ECI/ABP News/ABP Majha)
EB Charge: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் குறைப்பு.. இன்று முதல் அமல்.. முழு விபரம்
சிறிய வகை அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்று முதல் பொது மின்சார கட்டண குறைப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் 18 ஆம் தேதி கள ஆய்வில் முதலமைச்சர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ” இரண்டாவதாக, சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் (small apartments) உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ள அடிப்படையில், இதனை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். இதன்கீழ், பொதுப் யூனிட்டிற்கு எட்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அந்த மின்கட்டண மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக மின்சார துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பில்” மாண்பமை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி | Dயை மின் கட்டண ஆணை எண் 7 நாள் 09.09.2022ல் உருவாக்கியது.
ஆட்டுக்குட்டி முதல் ஸ்கூட்டி வாகனம் வரை.. மாட்டு வண்டியில் வந்து இறங்கிய சீர்வரிசை..!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 18.10.2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் ”பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. எனவும் இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்றும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் 15 பைசாவிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிக்காட்டுதலின் படி மாண்பமை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குடியிருப்புகளுக்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத தாழ்வழுத்த மின்கட்டண வகை IE-ஐ அறிமுகப்படுத்தியும் இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ரூ.5.50/யூனிட் என நிர்ணயித்தும் 01.11.2023 முதல் அமலுக்கு வருமாறு ஆணை எண்: 9, நாள் ; 31.10.2023 மூலம் வெளியிட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்டுக்குட்டி முதல் ஸ்கூட்டி வாகனம் வரை.. மாட்டு வண்டியில் வந்து இறங்கிய சீர்வரிசை..!