‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக ஆளில்லா விண்கலம் வரும் டிசம்பரில் அனுப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வந்தவுடன் தெற்கு திசைக்கு அனுப்ப வேண்டிய செயற்கைகோள்கள் அனைத்தும் அங்கு இருந்து அனுப்பப்படும்.
ஆந்திர மாநிலம் , ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தது..
பூமி கண்காணிப்பு இ.ஓ.எஸ். 08 என்ற செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி- 3டி ராக்கெட் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தியது.
எஸ்.எஸ்.எல்.வி.,யில் 3 ராக்கெட் ஏவப்பட்டதை அடுத்து, இனி வணிக ரீதியில் பயன்படுத்தப்படும். இ.ஓ.எஸ். 08 செயற்கைக்கோளில் சூரியசக்தி மின்தகடு செயல்படத் துவங்கி உள்ளது.
எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் வெற்றிகரமாக அமைந்ததால், தனியார் நிறுவனங்கள் இடையே அதன் தொழில்நுட்ப பரிமாற்றம் நடக்கும். இதுபோல் நடக்க இருப்பது, இதுவே முதல்முறை ஆகும்.
எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டை வணிக ரீதியாக பயன்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசின், 'நியுஸ்பேஸ் இந்தியா மேற்கொள்ளும்.
குறிப்பாக செயற்கைகோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளியில் எப்படி இருக்கிறது, என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா முதல் சோதனை ராக்கெட் திட்டம் வருகிற டிசம்பரில் செயல்படுத்தப்படும் என்றார்.
மேலும், இந்தத் திட்டத்திற்கான ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்துள்ளது. அதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும். தெற்கு திசைக்கு அனுப்ப வேண்டிய செயற்கைகோள்கள் அனைத்தும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து அனுப்புவது தான் நல்லது என் கூறினார்.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டி வருகிறது.
அதற்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லாத விண்கலனை வரும் டிசம்பரில் அனுப்பப்படவுள்ளது.
இதற்கான பணிகள் திருவனந்தபுரம், பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இது வெற்றிகரமாக நடைபெற்றால் அடுத்த கட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பு ககன்யான் திட்டம் தொடங்கப்படும் என்றார். மேலும், இதற்காக 4 விண்வெளி வீரர்கள் பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடதக்கது.