கரூரில் வெற்றிலை விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் முகூர்த்த தினம் இல்லாததால், பச்சைக்கொடி வெற்றிலை விலை வீழ்ச்சி. விவசாயிகள் கவலை.
வேலாயுதம்பாளையம் பகுதியில் முகூர்த்த தினம் இல்லாததால் தற்போது பச்சைக்கொடி வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாப்பாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காட்டுத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் கற்பூரம் பச்சை கொடி, இளங்கால், முதுகால் ஆகிய வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காவிரி கரையோர பகுதிகளில் புகழூர் பாசன வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றங்கரையோரம் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். வெற்றிலையை நாம் அடிக்கடி பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம். வெற்றிலை தமிழ்நாடு கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறது. மத நிகழ்வுகள், திருமணம் மற்றும் பூஜைகளில் வெற்றிலை கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை ஏராளமான மருத்துவம் மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில், குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிக்கோடின் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் விளையும் வெற்றிலை மருத்துவ குணங்கள் உள்ளது.
தினமும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பலப்படும். இருமல் பிரச்சனையை, தொண்டையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வெற்றிலையை அடிபட்ட உடல் காயத்திற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. காயம் விரைவாக குணமடைய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. வெற்றிலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் உள்ளது. வெற்றிலை வயிறு மற்றும் அஜீரண கோளாறை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. வெற்றிலையில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள் பெருங்குடல் காற்று நீக்கியாக செயல்படுகிறது. ஈறுகளில் உள்ள வலி அல்லது வீக்கத்தை நீக்க வெற்றிலையும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் ஈறுகளில் ஏற்படும் அலர்ஜியை தடுக்கும் பண்புகளை கட்டுப்படுத்தும் என்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வெளி மாநிலங்களுக்கு வெற்றிலை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தனர். இதனால், பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. இதன் மூலம் பல்வேறு குடும்பங்கள் பிழைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்றுநோய் மனிதர்களுக்கு ஏற்பட்டு, முழு ஊரடங்கு ஏற்பட்டது. அதன் பிறகு ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, வெளிமாநிலங்களுக்கு வெற்றிலை குறைந்த விலைக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால், மார்க்கெட்டில் மலிவு விலைக்கு விற்க முடியாமல், உள்ளூர் பகுதிகளிலேயே பல்வேறு இடங்களில் விவசாயிகள் விற்று வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் முகூர்த்த சீசன் ஆரம்பித்ததால், வெற்றிலை தேவை அதிகரித்தது. இதனால் உள்ளூர், வெளியூர் மட்டும் இன்றி வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
வேலாயுதம்பாளையம் சுற்று பகுதியில் விளையும் கற்பூரம் வெற்றிலை ஒரு கவுலி என்பது 102 வெற்றிலைகள், 20 கவுலி என்பது ஒரு கூடை, 26 கவுலிகள் கொண்டது ஒரு முட்டி, 104 வெற்றிலைகள் கொண்டது ஒரு சுமை என கூறப்படுகிறது. வெற்றிலை விவசாயிகள், சங்க நிர்வாகி ராமசாமி கூறுகையில், கடந்த மாதத்தில் விற்ற முதுகால் கற்பூரம், வெற்றிலை ஒரு சுமை ரூ. 3000 முதல் ரூ. 4000 வரை விற்றது. தற்போது ஒரு சுமை ரூ. 1500 முதல் ரூ. 1000 வரையிலும், இதே போல இளகால் கற்பூரம் ஒரு சுமை ரூ. 5000 முதல் விற்றது. தற்போது ஒரு சுமை ரூ. 3500 முதல் ரூ. 4000 வரை தரத்திற்கு ஏற்ற விலையில் விற்கப்படுகிறது.
கடந்த மாதத்தில் விற்ற இளங்கால் வெள்ளை பச்சைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ. 8500 முதல் ரூ. 9000 வரை விற்றது. தற்போது ஒரு சுமை உருவாகிற முதல் ரூ.6000 வரையிலும், முதுகால் பச்சைக்கொடி சுமை ரூ. 2500 முதல் ரூ.3000 வரை விற்பது. தற்போது ஒரு சுமை ரூ. 1000 முதல் ரூ. 1500 வரை தரத்திற்கு ஏற்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முகூர்த்த சீசன் இருந்ததால், தேவை அதிகரித்து விலை ஏறியது. இதே நிலை ஆண்டு முழுவதும் நீடித்தால், விவசாயத்திற்கு வாங்கிய கடன் அடைப்பதுடன், விவசாயிகளின் வாழ்க்கை செழிக்கும் என்றிருந்தோம். அதற்குள் முகூர்த்த தினங்கள் இல்லாததால் தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சி அடைந்து விட்டது என்றார்.