“கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது” - கமல்ஹாசன் கடும் கண்டனம்
ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது - கமல்ஹாசன் ட்வீட்
கள்ளமில்லா மாணவர் மத்தியில் மதவாத விஷச்சுவரா? என்று கர்நாடகாவின் நடைபெற்று வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது’ எனப் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 9, 2022
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது. அனைவரும் பொதுவான சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்று கூறி இந்து அமைப்புகளும், அம்மாநில அரசுமே பேசி வருவது சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது.
இதற்கு பதிலடி தருகிறோம் என்று இந்து மாணவர்களும் மாணவிகளும் காவித் துண்டைக் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வருகின்றனர். நேற்று சமூக வலைதளங்களில் வைரலான ஹிஜாப் அணிந்து தனியாக வரும் மாணவியை, காவித் துண்டணிந்த ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடும் மாணவர்கள் முழக்கமிடும் காட்சியைப் பார்க்கவே மனம் பதைபதைத்தது.
ஷிமோகாவில் உள்ள ஒரு கல்லூரியில் தேசியக் கொடி இருந்த இடத்தில் காவிக் கொடியை ஏற்றி, மாணவர்கள் ஆர்ப்பரித்துள்ளனர். ஹிஜாப் விவகாரத்தில் முகிழ்த்த போராட்டம், வன்முறையாக மாறி 3 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்