மேலும் அறிய

Exclusive: தமிழில் அர்ச்சனை: ‛மக்கள் ஏற்கவில்லையே...’ - தாம்பராஸ்‛ | ‛அர்ச்சகர்கள் ஏற்கவில்லையே’ -தமிழ் ஆர்வலர்கள்!

தமிழர்கள் கட்டிய கோயில்களில் தமிழிலே அர்ச்சனை செய்யப்படும் என்பதையே இனிப்பான செய்தி என்று சொல்லும் அளவுக்கு தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக தூங்கிவிட்டார்கள்- ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனார்

தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்வதற்காக முதற்கட்டமாக 47 கோவில்களை தேர்வு செய்து "அன்னை தமிழில் அர்ச்சனை" என விளம்பர பலகைகளும் வைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்திருந்தார். மேலும் முதற்கட்டமாக இந்த  வாரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்  தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளதாகவும், தமிழில் அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல் பலகை பொதுவெளியில் வைக்கப்படும் எனவும் தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து  வழிபாடு செய்யலாம் என்றும் சேகர்பாபு கூறியிருந்தார். 

Exclusive: தமிழில் அர்ச்சனை:  ‛மக்கள் ஏற்கவில்லையே...’ - தாம்பராஸ்‛ | ‛அர்ச்சகர்கள் ஏற்கவில்லையே’ -தமிழ் ஆர்வலர்கள்!

தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோயில்களிலும், அதனைத் தொடர்ந்து சிறிய கோயில்களிலும் கொண்டுவர திட்டமுள்ளதாகவும், அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களை முறையாக பயன்படுத்தி இனி அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் சேகர்பாபு கூறியிருந்தார். அனைத்து கோயில்களிலும் தமிழ் அர்ச்சனை சாத்தியமா? புரோகிதர்கள், பொதுமக்கள் கருத்துக்களை தொகுத்து வழங்குகிறது ஏபிபி நாடு....

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனாரிடம் பேசியபோது,

Exclusive: தமிழில் அர்ச்சனை:  ‛மக்கள் ஏற்கவில்லையே...’ - தாம்பராஸ்‛ | ‛அர்ச்சகர்கள் ஏற்கவில்லையே’ -தமிழ் ஆர்வலர்கள்!

தமிழில் அர்ச்சனை செய்வது என்பது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல; முன்னாள் முதல்வர் பக்தவசலம் மதுரையில் தமிழில் அர்ச்சனை செய்வதை தொடங்கி வைத்தார்கள். இதற்கான முன்னெடுப்பை நீதிக்கட்சியின் முதல்வராக இருந்த பி.டி.ராஜன் முன்னெடுத்தார், அதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த காலங்களில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை வைக்கப்பட்டது, தமிழிலும் அர்ச்சனை என்று போடாதீர்கள் தமிழில் அர்ச்சனை என்று போடுங்கள் என்று குமரி அனந்தன், பழ.நெடுமாறன் ஆகியோர் சட்டமன்றத்திலேயே குரல் எழுப்பி இருந்தனர். 

தமிழில் அர்ச்சனை செய்வதற்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன; முடிவில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாகவே நீதிமன்ற தீர்ப்புகளும் வந்தன. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான சுற்றறிக்கைகளை அவ்வப்போது இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டும் தமிழ் மந்திரங்களை அச்சிட்டும் வெளியிட்டு வந்தாலும் தமிழில் அர்ச்சனை செய்வது என்பது நடைமுறையில் இல்லாத நிலையிலேயே இருந்தது. தற்போது வந்த புதிய ஆட்சியில் இது வேகம் பெற்றுள்ளது.

’’கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்ற  அறிவிப்பை இனிப்பான செய்தி என்று சொல்வது எனக்கு ஆதங்கமாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழர்கள் கட்டிய கோயில்களில் தமிழிலே அர்ச்சனை செய்யப்படும் என்பதையே இனிப்பான செய்தி என்று சொல்லும் அளவுக்கு தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக தூங்கிவிட்டார்கள். இனியும் தூங்க வேண்டாம் விழிப்போடு இருப்போம்’’.

தமிழில் அர்ச்சனை செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுவது குறித்து கேட்டபோது, 

’’தமிழில் அர்ச்சனை செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதாலேயே அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய பக்தர்கள் கோரிக்கைவிடுத்தாலும் அதை செய்ய அர்ச்சகர்கள் மறுத்தார்கள்’’

தமிழில் அர்ச்சனை செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பொத்தாம்பொதுவாக சொல்லப்படும் கருத்து. தமிழில் அர்ச்சனை செய்வதை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் இருந்த அர்ச்சகர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு இருந்தது. 

தமிழில் அர்ச்சனை செய்வதை ஆணைகள் மூலமாக அரசுகள் வற்புறுத்தியபோது வேண்டா வெறுப்பாக அர்ச்சகர்கள் அதனை செய்துள்ளார்கள். கடவுளை வணங்க செல்லும் மக்கள் தமிழில் அர்ச்சனை செய்ய கேட்டால் வேண்டா வெறுப்பாக அதனை அர்ச்சகர்கள் செய்தபோது கடவுளை கும்பிட போகிற இடத்தில் அர்ச்சகர்களிடம் சண்டை எதற்கு என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்துவிட்டது. இதனாலேயே தமிழில் அர்ச்சனை செய்யும் வழக்கம் குறைந்துவிட்டதற்கு காரணம். 

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணனிடம் கேட்டபோது, 

Exclusive: தமிழில் அர்ச்சனை:  ‛மக்கள் ஏற்கவில்லையே...’ - தாம்பராஸ்‛ | ‛அர்ச்சகர்கள் ஏற்கவில்லையே’ -தமிழ் ஆர்வலர்கள்!

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் முறை ஏற்கெனவே உள்ளது. ’’தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’’ என்ற வாசகம் அடங்கிய பலகை கோயில்களில் வைத்திருந்தார்கள்.

’’விருப்பபட்டவர்கள் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று இருந்து வரும் நிலையில் யாருமே தமிழில் அர்ச்சனை செய்ய கேட்பதில்லை என்பதுதான் பட்டாச்சாரியார், குருக்கள் ஆகியோர் எங்களிடம் கூறும் தகவலாக இருக்கிறது’’.

ஆனால் இப்போது தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அறநிலையத்துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது. அறநிலையத்துறையின் இந்த முயற்சி நல்லதுதான். 

தமிழில் அர்ச்சனை என்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று; திருவாசகத்தை எல்லா சிவன் கோயில்களிலும் ஓதுவார்கள் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள். இருப்பினும் தமிழில் அர்ச்சனை என்பதை எந்த அளவிற்கு பக்தர்கள் விரும்புவார்கள் என்று தெரியாது. இருப்பினும் அதை ஆட்சேபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தற்போதைய நிலையில் பெரிய கோயில்களில் அர்ச்சனை  செய்வது என்பது குறைந்துவிட்டது. சிறிய கோயில்களில் அர்ச்சனை செய்வது அதிகரித்துள்ளது. 

தமிழும் சமஸ்கிருதமும் கடவுள் கொடுத்த மொழியாகவே நாங்கள் பார்க்கிறோம், தமிழுக்கு இலக்கியம் வகுத்ததே பிராமணர் சமூகத்தை சேர்ந்த தொல்காப்பியர்தான். எனவே பிராமணர் ஆகிய நாங்கள் தமிழை மிகவும் மதிக்கிறோம். ஆனால் எங்களை பொறுத்தவரை

’’தமிழில் அர்ச்சனை செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை; விருப்பபட்ட பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்யலாம், ஆனால் கடந்த முறை இதனை கொண்டுவந்தபோது பக்தர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை’’ என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget