தமிழக தடகள வீரர்கள் கேரளாவில் அவமதிப்பு - ரயிலில் இருந்து பாதியில் இறக்கிவிடப்பட்டனர்
ரயில்வே எப்போதும் விளையாட்டை ஊக்கப்படுத்தி வருகிறது. வீரர்கள் தங்கள் உபகரணங்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல அனுமதி வழங்கி அவர்கள் வேறு ரயில் மூலம் சேலம் அனுப்பி வைக்கப்பட்டனர் - தெற்கு ரயில்வே
தேசிய அளவிலான அதெலடிக் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய சேலம் மாவட்டத்தை சார்ந்த வீரர்களை தங்களின் விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்ல கூடாது என காரணம் காட்டி கேரளாவில் உள்ள கொல்லம் ரயில்வே நிலையத்தில் இறக்கி விட்டு அதிகாரிகள் அவமரியாதை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தை சார்ந்த முத்து என்ற தடகள வீரர் உட்பட நான்கு வீரர்கள் திருவனந்தபுரத்தில் நடந்த பஸ்ட் ஓப்பன் நேசனல் தடகள போட்டியில் கலந்து கொண்டு ஆறாவது இடம் பிடித்துள்ளார் இந்த போட்டிகளில் அவருடன் வந்தவர்கள் தங்கம் உட்பட பல பதக்கங்களை பெற்று விட்டு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல ரயிலில் தங்கள் உபகரணங்களை ஊருக்கு கொண்டு செல்ல ரயில் ஜன்னல் ஓரம் வெளிப்புறமாக கட்டி வைத்துள்ளனர்.
பின்னர் ரயில் புறப்பட்டு கொல்லம் ரயில் நிலையம் வந்தபோது டிக்கெட் பரிசோகதர் உபகரணங்களை ஜன்னலில் கட்டிவந்த காரணத்தை கூறி கொல்லம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார், ஈட்டி எறிதல் விளையாட்டில் பயன்படுத்த கூடிய ஈட்டி சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலானது இதனை ஏதோ ஒரு சாதாரண பொருள் என்பதை போல ரயில்வே போலீசார் அதனை அவிழ்த்து கீழே போட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து. இந்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டு தங்கள் ஆதங்கத்தை வீரர்கள் சமூக வளைதளங்களில் வெளியிட்டனர் உடனடியா இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அவர்களுக்கு வேறு ஒரு ரயிலில் சேலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
தெற்கு ரயில்வே துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி குணநேசன் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் இதில் விளையாட்டு வீரர்கள் கொண்டு வந்த அந்த ஈட்டியை ரயிலின் வெளியே ஜல்லன் கம்பியில் கட்டி வைத்ததால் விபத்து ஏற்பட கூடாது என்ற காரணத்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தெற்கு ரயில்வே எப்போதும் விளையாட்டை ஊக்கப்படுத்தி வருகிறது என்பதை தெரிவித்துக்கொண்டு அந்த வீரர்கள் தங்கள் உபகரணங்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல அனுமதி வழங்கி அவர்கள் வேறு ரயில் மூலம் சேலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது