மேலும் அறிய

அரசுக்கு சொந்தமான இடம் இருதரப்பினரால் ஆக்கிரமிப்பு : வேளாண்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு..!

முருகேரியில் அரசு வேளாண்மை நிலையத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் இருதரப்பினருக்கு இடையே மோதல்! மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டம் அறிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முருகேரி கிராமத்தில் அரசு வேளாண்மை நிலையத்திற்கு சொந்தமான இடம் (சர்வே நம்பர் 6/6)  சுமார் 36 சென்ட் பரப்பளவில் உள்ளது. இதில் வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் தங்குவதற்காக கட்டப்பட்ட இரண்டு வீடுகளும் உள்ளன, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வீட்டில் வேளாண்மை அதிகாரிகள் தங்காமல் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர், அதில் வாடகைக்கு இருக்கக்கூடிய ராஜா என்பவரின் தாயார் வசித்து வருகிறார், குறிப்பாக ராஜா என்பவருக்கு சொந்தமாக வீடு மற்றும் நிலம் உள்ளது, இந்த நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் அங்கு வாடகைக்கு அவரது தாயாரை தங்கவைத்து குடியிருப்பு சுற்று இருக்கக்கூடிய சுமார் 36 சென்ட் அளவு உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தி வருகிறார்.

அரசுக்கு சொந்தமான இடம் இருதரப்பினரால் ஆக்கிரமிப்பு : வேளாண்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு..!

மேலும் அதே இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். சொந்த வீடு, நிலம் என அனைத்தும் இருப்பவர் ஆனால் இவர் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் அங்கு வைக்கோல்போரை வைத்துள்ளார், இந்த நிலையில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜா என்பவருக்கும் பாலசுந்தரம் என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி காவல் நிலையம் வரை சென்று முடிந்தது, இருப்பினும் இந்த ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் வேளாண்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு மௌனம் சாதித்து வருகின்றனர், மேலும் ஊர் பொதுமக்கள் சார்பாக பலமுறை வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தும் எதற்கும் செவி சாய்க்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர், இந்த நிலையில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற  இல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டம் நடைபெறும் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு சொந்தமான இடம் இருதரப்பினரால் ஆக்கிரமிப்பு : வேளாண்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு..!

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் அந்த துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க அதிகாரம் உடையவர்கள். தேவையான நேர்வுகளில் வருவாய் துறையை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பை நாடலாம். பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்கள். நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நகராட்சி ஆணையர், பேரூராட்சி ஆணையர் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள். பல பொது இடங்கள் ஆக்ரமிப்புச் சட்டத்திற்கு உட்படாத நிலமாக இருக்கும். இப்படிப்பட்ட நேர்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் முன்னின்று நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்.

அரசுக்கு சொந்தமான இடம் இருதரப்பினரால் ஆக்கிரமிப்பு : வேளாண்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு..!

நீங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்தவுடன் நீங்கள் அதற்கு உடனடியாக பதில் கொடுக்க வேண்டும். உங்கள் பதிலில் திருப்தி இல்லை என்றால் திரும்பவும் பிரிவு 6(1)ன்படி ஒரு நோட்டீஸ் அனுப்புவார்கள். அதனை எதிர்த்து நீங்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பிரிவு 10 ன் கீழ் மேல்முறையீட்டு செய்ய வேண்டும். அந்த மேல்முறையீட்டு மனுவில் வட்டாட்சியர் அல்லது துறை சம்மந்தப்பட்ட அலுவலரின் அறிவிப்புக்கு இடைக்கால தடை கோரி சேர்த்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் இடைக்கால மனுவை காரணம் காட்டி தடை உத்தரவு பெற்று ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Cadre Fight | மிரட்டல்..கல்வீச்சு..அடிதடி..அத்துமீறிய விசிக பெண் நிர்வாகி பரபரப்பு காட்சிகள்EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Embed widget