TN Rain Alert: தமிழ்நாட்டில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு? எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம் இதோ..
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.03.2023 மற்றும் 23.03.2023: கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
24.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பெலாந்துறை (கடலூர்) 9, அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), தொழுதூர் (கடலூர்) தலா 8, வேப்பூர் (கடலூர்) 7, கீழச்செருவாய் (கடலூர்), கல்லணை (தஞ்சாவூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), அகரம் சீகூர் (பெரம்பலூர்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 6, தேவக்கோட்டை (சிவகங்கை), கோடியக்கரை (நாகப்பட்டினம்), லால்பேட்டை (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), திருவாடானை (ராமநாதபுரம்) தலா 5, ஆரணி (திருவண்ணாமலை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), பூடலூர் (தஞ்சாவூர்), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), ஏத்தாப்பூர் (சேலம்), தண்டையார்பேட்டை (சென்னை), கடலூர்,, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), காரைக்கால் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டிக் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த வானிலையே நிலவுகிறது. வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.