மேலும் அறிய

Tamil news | பெண் சிசு உயிரிழப்பு... கைதிகள் கலவரம்... பணிமாறும் டாக்டர்கள்... இன்னும் பல மதுரை செய்திகள்!

மருத்துவர்கள், செவிலியர்கள் சத்தமில்லாமல் அயல் பணி மூலம் வெளியேறி வருவதால், கற்பித்தல் பணி. நோயாளிகளுக்கு சிகிச்சைப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலம் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம், மற்றும் அதிலுள்ள கனிமங்களை கொள்ளை அடித்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றம் திண்டுக்கல் சரக டி.ஜ.ஜி- விஜயகுமாரி உத்தரவு.
 
2. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Tamil news | பெண் சிசு உயிரிழப்பு... கைதிகள் கலவரம்... பணிமாறும் டாக்டர்கள்... இன்னும் பல மதுரை செய்திகள்!
3.மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால், பிளேடால் உடலில் காயம் ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
 
4. "மதுரை உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தனிக்கவனம் எடுத்து விசாரணை நடத்தப்படும். பெண் சிசுக்கொலைகள் அதிகம் பதிவாகியுள்ள உசிலம்பட்டி பகுதியில் இனி சிசுக்கொலைகளை தவிர்க்க காவல்துறையுடன் இணைந்து தனிக்குழு அமைத்து விழிப்புணர்வு செய்து கண்காணிக்கப்படும்''- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மதுரையில் தெரிவித்தார்.

Tamil news | பெண் சிசு உயிரிழப்பு... கைதிகள் கலவரம்... பணிமாறும் டாக்டர்கள்... இன்னும் பல மதுரை செய்திகள்!
5. இலங்கை சிறையில் தவிக்கும் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 68 பேரையும், 11 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வரும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் 11-வது நாளான இன்று 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
 
6. ஹரியானாவைச் சேர்ந்தவர் யோகேஷ். இவர் தனது மனைவியுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். இந்தநிலையில் மனைவியை கொலை செய்துவிட்டு  தப்பி ஓடிவிட்டார். மும்பையில் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கடன் பிரச்னை காரணமாக நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட யோகேஷ் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tamil news | பெண் சிசு உயிரிழப்பு... கைதிகள் கலவரம்... பணிமாறும் டாக்டர்கள்... இன்னும் பல மதுரை செய்திகள்!
 
7. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவிபெறும் டயோசீசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில்  தலைமையாசிரியர் ஜெபா என்ற கிறிஸ்தோபர் ஜெயக்குமாரை, திருநெல்வேலி திருமண்டலம் டயோசீசன் மேல்நிலைப் பள்ளிகள் நிர்வாக மேலாளர் புஷ்பராஜ்  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தெரிந்த கிறிஸ்தோபர் ஜெயக்குமார் தலைமறைவு. பள்ளி நிர்வாகம் சார்பில் திசையன்விளை காவல்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
 
8. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுஒரு நபர் ஆணையத்தின் 34-வது கட்ட விசாரணையில் 3-வது நாளான நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவத்தின் போது தூத்துக்குடியில்  அப்போது  பணியிலிருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேஷ்  தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள ஒரு நபர் ஆணையத்தில் இன்று ஆஜராக உள்ளார்.

Tamil news | பெண் சிசு உயிரிழப்பு... கைதிகள் கலவரம்... பணிமாறும் டாக்டர்கள்... இன்னும் பல மதுரை செய்திகள்!
 
9.நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து சந்திப்பு செல்லும் சாலையில் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே கஞ்சா புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது இலந்தை குலத்தைச் சேர்ந்த பச்சைக்கிளி ஓட்டிவந்த பைக் மற்றும் மேலக்கருங்குளத்தை சேர்ந்த முத்துக்குமார் ஓட்டி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர், சோதனையில் இருவரின் வாகனத்திலும் மறைத்து வைத்திருந்த தலா 2 கிலோ வீதம் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்.
 
10. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை கண்டித்து நெல்லையில் ஜனவரி 4ஆம் தேதி தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் பாளையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது, இக்கூட்டத்தில் அணு உலை பூங்கா திட்டம் கைவிடப்பட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது, மேலும் இப்போராட்டத்தில் இக்கோரிக்கையை ஆதரிக்கும் அனைத்து கட்சிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்க செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
 
11. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் சத்தமில்லாமல் அயல் பணி மூலம் வெளியேறி வருவதால், கற்பித்தல் பணி. நோயாளிகளுக்கு சிகிச்சைப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tamil news | பெண் சிசு உயிரிழப்பு... கைதிகள் கலவரம்... பணிமாறும் டாக்டர்கள்... இன்னும் பல மதுரை செய்திகள்!
12. ஜனவரி 1 முதல் திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி (22627/22628), பகல் நேர நாகர்கோவில் -  கோயம்புத்தூர் - நாகர்கோவில் ரயில் (16321/16322),  மதுரை - புனலூர் - மதுரை (16729/16730), ராமேஸ்வரம் - திருச்சி - ராமேஸ்வரம் (16850/16849), திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி (16791/16792) ஆகிய விரைவு ரயில்களில் தலா இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டியுடன் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Embed widget