என் இனிய நண்பர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன் - கமல்ஹாசன்
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் உறுப்புகள் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவில் அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ரஜினிக்கு நரம்பியல் மற்றும் இருதய நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ள நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து அவரை தொடர்ந்து கண்காணித்தனர்.
ரஜினியின் உடல்நிலை குறித்து விளக்கமளித்த மருத்துவமனை, “நடிகர் ரஜினிகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவந்தனர்.
அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையிலிருந்து இன்னும் சில நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 29, 2021
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ”அவமானப்படுத்துறாங்க“ : முறையிட்ட நரிக்குறவர் பெண்ணுடன் அன்னதான உணவு உண்டார் அமைச்சர் சேகர்பாபு
ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை இதுதான்.. Carotid Artery Revascularisation என்றால் என்ன?
Jai Bhim | அழுத்தமானது.. இதை திருப்பிக்கொடுக்க போறேன்.. சூர்யா கொடுத்த ஜெய்பீம் அப்டேட்..
Ajith Bike Trip: "தல" தாறுமாறு செய்யும் பைக்கின் விலை தெரியுமா?