மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர முயற்சியால் தமிழகத்துக்கு வந்த ஹூண்டாய்... எப்படி?
ஹூண்டாய் மோட்டார் குழுமம் தெற்கு தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட கொரிய நிறுவனமாகும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் மே 6ஆம் தேதி 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து ஹூண்டாய் சான்ட்ரோ எனும் வாகனம் 1998 ஆம் ஆண்டு செம்டம்பர் 22 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்த நிறுவனம் நாட்டின் 2 வது வாகன ஏற்றுமதியாளராக இருந்தது. தற்போது வரை 10 -க்கும் மேற்பட்ட வாகன மாதிரிகளை தயாரித்து சந்தையில் விற்பனைக்கு வைத்து உள்ளது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் 87 -க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது ஹூண்டாய் நிறுவனத்தில் வாகனங்கள்.
தமிழகத்தில் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு வெளி நாட்டுக் கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் துவங்கியது. அப்போது முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதியின் தீவிர முயற்சியால் அந்த ஆண்டிலேயே ரூ 3,500கோடி என்ற பெரிய அளவு முதலீட்டில் சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் 500 ஏக்கர் நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் அமைந்தது ஹூண்டாய் கார் தயாரிப்பு தொழிற்சாலை.
இந்த கார் தொழிற்சாலைக்கு 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே இந்த நிறுவனத்தில் பெரும்பான்மை வேலைவாய்ப்பு வழங்கப்படுவதற்கான உத்தரவாதத்தையும் அளித்தார்.
அடுத்த 2 ஆண்டுகளில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலையில், ரூ. 2,400 கோடி மதிப்பிலான பிரிவில் பயணிகள் காரான “சான்ட்ரோ” கார் தயாரிப்பு தொடங்கப்பட்டது. அதன் பின் 1999 ஆம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் தனது “அக்சென்ட்” காரை தயாரித்து வெளி இட்டது. அப்போது இந்தியாவில் ஹூண்டாய் கார்கள் தயாரிப்பு 50 ஆயிரத்தை கடந்தது. தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 25 ஆண்டுகளில் 14 வகையான கார்களை தயாரித்துள்ள ஹூண்டாய் நிறுவனம், 190 -க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்ந நிறுவனத்தின் மக்களுக்கு பிடித்தமான காராக ஹூண்டாய் க்ரெட்டா கார் 19 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் அனைத்திலும் சிறப்பாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
22 ஆண்டுகளுக்கு முன்பு ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்திற்கு வர தீவிர முயற்சி காட்டி துவங்கி வைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது அந்நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்துள்ளார் அவரின் மகனும் தற்போது தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.