மேலும் அறிய

OPS Case: பறிபோன அதிமுக பெயர், கொடி; முடிந்தது ஓபிஎஸ் சாம்ராஜ்யம்! குஷியில் இபிஎஸ்!

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு  வந்தபோது, பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 அதிமுக பொதுச் செயலாளராக  தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம்  ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு  வந்தபோது, பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை, தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.

ஒபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தாகல் செய்த வழக்கு நம்பர் ஆகிவிட்டது,  இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதி சதீஷ்குமார், எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனைமுறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இ.பி.எஸ். தரப்பில்  நான்கைந்து மாதங்களில் முக்கியமான எம்.பி தேர்தல் வரவுள்ளது,  ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார்,  எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார்,  பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!
10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar cases : ”சவுக்கு பரபரப்பு வாக்குமூலம் கையை உடைத்தது உண்மை”வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல்KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம்தோட்டத்தில் கைப்பற்றிய கேன்? வலுக்கும் சந்தேகங்கள்Salem Gold Thattu Vadai Set : வாவ் என்ன ருசி என்ன ருசிதங்கத்தில் தட்டுவடை? சேலத்தில் குவியும் மக்கள்Savukku Shankar cases : ”கஞ்சா வழக்கு பொய்! ஆவணங்கள் எங்கட்ட இருக்கு” சவுக்கு வழக்கறிஞர் ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!
10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!
TN 10th Result Centums:கணிதத்தில் கலக்கிய மாணவர்கள் - எவ்வளவு பேர் எந்த பாடத்தில் சதம்? பாடவாரியாக லிஸ்ட் இதோ!
கணிதத்தில் கலக்கிய மாணவர்கள் - எவ்வளவு பேர் எந்த பாடத்தில் சதம்? பாடவாரியாக லிஸ்ட் இதோ!
10th Result District Wise: 10 வகுப்பு தேர்வில் மாஸ் காட்டிய மாவட்டங்கள்... முதலிடம், கடைசியிடம் யாருக்கு தெரியுமா?
10 வகுப்பு தேர்வில் மாஸ் காட்டிய மாவட்டங்கள்... முதலிடம், கடைசியிடம் யாருக்கு தெரியுமா?
TN 10th Result 2024: வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  - உங்களது ரிசல்டை அறிவது எப்படி?
உங்களது ரிசல்டை அறிவது எப்படி? வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
10th Result Subject Wise: ஆங்கிலத்தில் அடித்து தூக்கிய தேர்ச்சி விகிதம்: 10ஆம் வகுப்பில் பாடவாரியாக தேர்ச்சி விகிதம் லிஸ்ட்!
ஆங்கிலத்தில் அடித்து தூக்கிய தேர்ச்சி விகிதம்: 10ஆம் வகுப்பில் பாடவாரியாக தேர்ச்சி விகிதம் லிஸ்ட்!
Embed widget