மேலும் அறிய
Advertisement
Rain Alert :தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. முழு விவரம் இதோ
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
24.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25.08.2023 மற்றும் 26.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.08.2023 மற்றும் 28.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29.08.2023 மற்றும் 30.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) 11, KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), உத்தண்டி (சென்னை), விஐடி சென்னை ARG (செங்கல்பட்டு) தலா 10, சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) 9, திருவொற்றியூர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை) தலா 8, திருவள்ளூர், கொரட்டூர் (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), மணலி (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை) தலா 7, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), சிடி மருத்துவமனை தொண்டையார்பேட்டை (சென்னை), சென்னை விமான நிலையம், வளசரவாக்கம் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) தலா 6, திருவாலங்காடு (திருவள்ளூர்), ஐஸ் ஹவுஸ் (சென்னை), திருப்பூர் KVK AWS (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), ஆலந்தூர் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), எம்.ஜி.ஆர்.நகர் (சென்னை), DGP அலுவலகம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம், பெருங்குடி (சென்னை), ராயபுரம் (சென்னை), அண்ணாநகர் (சென்னை), மீனம்பாக்கம் ISRO AWS (சென்னை), பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 5, அறந்தாங்கி (புதுக்கோட்டை), பூந்தமல்லி (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), மதுரவாயல் (சென்னை), நந்தனம் ARG (சென்னை) தலா 4, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஆவடி (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), திருத்தணி PTO (சென்னை) தலா 3, பூண்டி (திருவள்ளூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 2, வேப்பூர் (கடலூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தாம்பரம் (செங்கல்பட்டு), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), பேரையூர் (மதுரை), காஞ்சிபுரம், கொடைக்கானல் (திண்டுக்கல்), விருத்தாசலம் (கடலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), திருமங்கலம் (மதுரை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), பாடலூர் (பெரம்பலூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion