Happy Pongal 2025 Wishes: குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்குமான பொங்கல் வாழ்த்து, வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் என்ன போடலாம்?
Happy Pongal 2025 Wishes in Tamil: பொங்கல் தினத்தன்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு பகிரக்கூடிய பல்வேறு வாழ்த்துச் செய்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Happy Pongal 2025 Wishes in Tamil: தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று நெருக்கமானவர்களுக்கு, பகிரக்கூடிய வகையிலான குறுந்தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
பொங்கல் திருநாள்:
அறுவடை திருநாளான பொங்கல் தமிழர்களின் கொண்டாட்டங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய நாளின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையிலிட்டு வழிபாடுவார்கள். இந்த விடுமுறை நாட்களை கொண்டாட தான், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். போகியை தொடர்ந்து தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நீளும் விடுமுறை, கடுமையாக உழைக்கும் மக்களுக்கான அவசியமான ஓய்வுக்காலமாகவும் உள்ளது. அந்த நன்நாளில் நமது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில், பகிரக்கூடிய வாழ்த்து மற்றும் சுவாரஸ்யமான குறுஞ்செய்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பொங்கல் வாழ்த்துகள்:
- தித்திக்கும் பொங்கலாய் உங்கள் வாழ்வும் இனிக்கட்டும்
- தை பொங்கல் உங்கள் வாழ்க்கையில் இனிமையும், வளமையும் நிறைவாகப் பரவச் செய்யட்டும்.
- உழவர்களின் உழைப்பையும், பூமியின் பசுமையையும் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை உங்களின் குடும்பத்தில் ஒளியுடனும் மகிழ்ச்சியுடனும் மலரட்டும்
- அன்பும் ஆனந்தமும் பொங்கி, அறமும் வளமும் தழைத்து. இல்லமும் உள்ளமும் மகிழ்ச்சி நிறைய தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள்
- தைத்திருநாள் பொங்கலை போன்று அனைவரது வாழ்விலும் வறுமை நீங்கி செல்வமும், வறட்சி நீங்கி செழிப்பும், உடலில் பிணி நீங்கி ஆரோக்கியமும், அறியாமை நீங்கி அறிவும், இருள் நீங்கி ஒளியும் பொங்கட்டும்
- உழவர் களத்தின் வேர்களாய் திகழும் உழைப்பின் மகத்துவத்தை இளைஞர்களுக்கும் பரப்பும் பொங்கல் பண்டிகை இனிதே அமையட்டும்
- பொங்கல் பண்டிகையின் ஆசி உங்கள் குடும்பத்தில் நிம்மதி மற்றும் செழிப்பு என்னும் பெருமையை ஏற்படுத்தட்டும்.
- நமது பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த பொங்கல் நாளில் உங்கள் மனம் மகிழ்ச்சியால் நிரம்பட்டும்
- விளைநிலங்களில் செழித்த மகிழ்ச்சி, உங்கள் மனதில் மலரட்டும் பொங்கலோ பொங்கல்!
- மண் வாசனையும் மரபுகளையும் இணைக்கும் இந்த பொங்கல் உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டட்டும்
- உங்கள் வீடு செழிக்க, உங்கள் கனவுகள் நிறைவேற, பொங்கலின் ஒளி வழிகாட்டட்டும்
- உழைப்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவை ஒருங்கிணைந்து உங்கள் வாழ்க்கையை பொறுமையுடன் செழிக்கச் செய்யட்டும்.
- உழைப்பின் மிகப்பெரிய வெற்றிகளை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் ஒரு உற்சாகமூட்டும் பொங்கலாக இது அமையட்டும்.
- தை பொங்கல் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் புதிய ஆற்றலையும் நேர்மறையையும் கொண்டு வரட்டும். இனிய பொங்கல் வாழ்த்துகள்
- உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இந்த அறுவடைத் திருநாளைப் போல ஏராளமாகவும் பலனளிப்பதாகவும் இருக்கட்டும்.
வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் என்ன போடலாம்?
- "சூரியனின் அரவணைப்பும், பொங்கலின் இனிமையும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரட்டும். #HappyPongal"
- "மகிழ்ச்சியின் அறுவடையையும் நல்ல அதிர்ஷ்டத்தின் சூரிய ஒளியையும் கொண்டாடுங்கள். பொங்கலோ பொங்கல்!"
- "இந்தப் பொங்கல் நாளில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் இனிப்புடன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம்."
- "ஒவ்வொருவருக்கும் இந்த நாள் சூரியனைப் போல் பிரகாசமாகவும், வெல்லம் போல் இனிப்பாகவும் அமைய வாழ்த்துகள். #PongalVibes"
- "அன்பு, அரவணைப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடையாளமான இந்த அறுவடை நாளிற்கு நன்றி. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!"
- "உங்கள் இதயத்தை நன்றியுடனும், உங்கள் நாளை மகிழ்ச்சியுடனும் நிரப்புங்கள். பொங்கலை அன்புடன் கொண்டாடுங்கள்."
- "மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் இனிமையான நினைவுகளின் அறுவடைக்குமான நாள் தான் இது. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!"
- "பொங்கல் வந்துவிட்டது, சூரிய ஒளியையும், அன்பையும், செழுமையின் இனிமையான வாசனையையும் பரப்புகிறது. அதை முழுமையாகக் கொண்டாடுங்கள்!"






















