கரூரில் 450 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - போலீஸ் அதிகாரிகள் குட்கா வேட்டை
கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 43 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.
கஞ்சா வேட்டையில் 14 கிலோ சிக்கியது வியாபாரிகளின் 43 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் நடந்த அதிரடி வேட்டையில் 14 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 43 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது, கரூர் மாவட்டத்தில் நடந்து வரும் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் இதுவரை கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா வியாபாரிகளின் 43 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். குட்கா விற்பனை செய்ததாக, பதுக்கி வைத்திருந்ததாக 192 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 450 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் நடத்திய குட்கா வேட்டையில் குட்கா விற்பனை செய்த 16 கடைகள் சீல் வைக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் குட்கா, கஞ்சா விற்பனை நடப்பதாக தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்கும் வகையில், காவல்துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்