Kalaignar Womens Assistance Scheme: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை எப்படி செயல்படுத்துவது..? நியாய விலை கடைகளுக்கு அரசு அறிவுறுத்தல்!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ரேஷன் கடையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில்,
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பம் பெறுவதற்கான கால அட்டவணையை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் வகுத்து வெளியிட வேண்டும். சென்னை மாவட்டத்தில் சென்னைப் பெருநகர மாநகராட்சி ஆணையாளர் கால அட்டவணையை வெளியிடுவார்.
- கால அட்டவணை வகுப்பதற்கு ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும்.
- ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவுசெய்யத் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
- மாவட்ட ஆட்சித் தலைவர் தமது மாவட்டத்தில் உள்ள விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களின் எண்ணிக்கை, அரசுத்துறை அலுவலர்கள் எண்ணிக்கை. பயோமெட்ரிக் சாதனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப்பதிவு செய்ய கால அட்டவணை வகுக்க வேண்டும்.
- மாவட்ட ஆட்சித் தலைவர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டச்செயல்பாடுகளைத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் பணிகளை மேற்கொள்வார். சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் அலுவலராக இருப்பார்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான குழு, வட்ட அளவிலான குழு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் அமைக்க வேண்டும். மாவட்டக் குழுவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர், தலைவராகச் செயல்படுவார்.
- ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
- குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.
பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாதபட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர குடும்ப அட்டையில் ஆண் குடும்பத்தலைவரின் மனைவியின் குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், குடும்பத்தலைவியாக கருதப்படுவார். ஒரு பெண்களில் ஒருவர் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
பொருளாதாரத் தகுதிகள்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.25 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
- ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.