மேலும் அறிய
Governor RN Ravi: "சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்" - நேதாஜி பிறந்தநாளில் ஆளுநர் பேச்சு..!
இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை என சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை ஆளுநர் மாளிகையில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, நேதாஜியை சிறப்பிக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ” இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்” என பேசியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















