Ondiveeran: ஓயாத தலைவன் ஒண்டிவீரன்.. நினைவு தபால் தலையை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி!
விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் தபால் தலையை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட, அதை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.
விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள ஒண்டிவீரனின் உருவ சிலைக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு ஒண்டிவீரனின் தியாகத்தை போற்றும் வகையில் மத்திய அரசின் சார்பில் அவரது உருவம் மற்றும் பெயர் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட, அதை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.
Paid floral tributes to freedom fighter #OndiVeeran at Tirunelveli TN, alongwith Honb TN Governor Honb MoS & Local MLA.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 20, 2022
சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/5tmjgz7h7B
யார் இந்த விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன்..?
நெற்கட்டான் செவ்வல் பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில், ஆற்காடு நவாப் வரி வசூலித்து வந்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றனர். பூலித்தேவனிடம் வரி கட்டுமாறு ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். ஆனால் அதற்கு படைத்தளபதி ஒண்டிவீரன் அரசனான பூலித்தேவன் மறுத்து விட்டார்.
ஆங்கிலேயர் துரத்தியடிப்பு
அந்நிய நாட்டினர் ஆங்கிலேயரின் போக்கை கண்டு 1755 ஆம் ஆண்டில் பூலித்தேவன் படைத்தளபதி ஒண்டிவீரன் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு, தோற்கடித்து மதுரைக்கு திருப்பி அனுப்பினர். ஆனால் தோற்கடிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை இறக்கினர். இதை அறிந்த கொண்ட பூலித்தேவன், ஆங்கிலேயர்களின் சதி திட்டங்களை முறியடிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அதை முறியடிக்க கூடிய சரியான ஆள் ஒண்டிவிரன் என முடிவு செய்தார். அப்போது ஆங்கிலேயரின் முகாமிற்கு தனி ஒரு ஆளாக சென்று, வெடி மருந்துகளை அழிக்கும் பொறுப்பை ஒண்டிவீரனிடம் பூலித்தேவன் ஒப்படைத்தார்.
கை துண்டிப்பு:
ஒண்டிவீரன் , இரவின் ஆங்கிலேயரின் முகாமிற்கு சென்று இலைதழைகளை மூடிக்கொண்டு தலைமறைவாக இருந்தார். அப்போது குதிரையை கட்டுவதற்காக வந்த ஆங்கிலேயர் ஒருவர் , இலை தலைகளுடன் தரையில் மறைந்திருந்த ஒண்டிவீரன் கையில் ஈட்டியை குத்தியதாக கூறப்படுகிறது. சத்தம் போட்டால் ஆங்கிலேயர் தெரிந்து கொள்வர் என எண்ணி, வலியை பொறுத்துக் கொண்டார். ஈட்டியை பிடுங்கினால் குதிரை அனைவரையும் எழுப்பி விடும் எண்ணி, ஈட்டியை புடுங்காமல், தன் கையை வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
சிதைந்த கோட்டை:
பின் பீரங்கிகளை ஆங்கிலேயர்களின் கோட்டை பக்கமே திருப்பி வைத்து விட்டு, ஒலி எழுப்பி விட்டு புறப்பட்டார் ஒண்டிவீரன்.சத்தம் கேட்ட ஆங்கிலேயர்கள் எதிரிகள் வந்துவிட்டனர் என எண்ணி, பீரங்கிகளை இயக்கினர். ஆனால் பீரங்கிகள் ஆங்கிலேயரின் பக்கமே திரும்பி தாக்கியதால், ஆங்கிலேயர்கள் கோட்டை சிதைந்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பூலித்தேவன் மறைவிற்கு பிறகும், அவர்களின் மகன்களுக்கு உதவியாக இருந்து ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றினார். ஒண்டிவீரன் கடைசி காலம் மற்றும் அவரது மரணம் குறித்து, தெளிவான தகவல்கள் இல்லை.