Save Bharathi: காப்பாற்றுங்கள் பாரதியை.. - உங்கள் பணம் ஒரு உயிரைக் காப்பாற்றும்..!
கடந்த 75 நாட்களில் போராடி 12.5 கோடி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 3.5 கோடியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண் குழந்தைக்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோய் (Spinal Muscular Atrophy) சிகிச்சைக்காக ரூ.16 கோடி மதிப்பிலான ஊசியை செலுத்த அவரது பெற்றோர் போராடி வருகின்றனர். கடந்த 75 நாட்களில் போராடி 12.5 கோடி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 3.5 கோடியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஜகதீஷ்- எழிலரசி தம்பதியினரின் குழந்தை பாரதிக்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு எனும் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதி...❤
— Karthik Raja (@Being_human1987) October 29, 2021
எல்லாரும் பண்டிகை கொண்டாட்ட மனநிலைக்கு வந்துட்டதால பாரதிக்கு வர கூடிய உதவிகள் கடைசி ஒரு வார காலமா ரொம்ப குறைஞ்சி போச்சி...நவம்பர் 6 பர்த்டேக்குள்ள ஊசி வாங்கவில்லை எனில் 75 நாட்களாக போராடுன போராட்டத்துக்கு ஒரு விடை கிடைக்காமல் போயிடும்..உங்களால் தான் இதுவரை வந்துள்ளோம் pic.twitter.com/8DXHJ4J4il
இந்த அரிய வகை நோயில் இருந்து விடுபட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ரூ.16 கோடி விலை மதிப்பிலான ஊசி தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் வேகமாக முன்னேறி, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தையை 2 வயதுக்கு முன்பே கொன்றுவிடுகிறது. எனவே, வரும் நவம்பர் 5ம் தேதி பாரதியின் இராண்டாவது பிறந்தநாள் வருவதற்குள் சிகிச்சையை அளிக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தில் பாரதியின் பெற்றோர் உள்ளனர்.
#savebarathi pic.twitter.com/hg01s0Kuii
— KALLAKURICHI DISTRICT OFC (@kallakurichiVSP) October 10, 2021
#savebarathi பாரதி என்ற மழலையை காப்பற்ற உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.. Gpay 9791793435.. மேலும் விவரங்கள் முதல் கமென்ட்ல்.. pic.twitter.com/Oq2CWtVEyE
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 18, 2021
தங்களின் உதவியுடன் ஒரு 40% தொகை திரட்டப்பட்டுள்ளது. உதவுங்கள் தோழர்களே. உங்க ₹10 ரூவா கூட எங்களுக்கு பெரிய உதவிதான். எப்படியாவது பாரதிய காப்பாத்திடலாம் தோழர்களே. இந்த ட்வீட்ட நெறய பகிருங்க. #SaveBharathi@shankarshanmugh @chimbu_deven @pandiraj_dir @vp_offl @beemji @Atlee_dir pic.twitter.com/7SipHByAyJ
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) September 22, 2021
குழந்தை பாரதியைக் காப்பாற்ற நமக்கு கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இம்மாத இறுதிக்குள் அந்த ஊசியை போட்டாகணும். இன்னும் தேவை 5 கோடி மட்டுமே! ஊர் கூடி தேரிழுத்தால் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி விடலாம். இயன்றதை அளியுங்கள். அனைவரிடமும் இதை பகிருங்கள். 🙏https://t.co/W8QtUhNNhh pic.twitter.com/PpcQPS0UOD
— SKP KARUNA (@skpkaruna) October 16, 2021
இவ்வளவு பெரிய தொகையை பாரதியின் பெற்றோருக்கு ஏற்பாடு செய்திட பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, Zolgensma போன்ற அரிய வகை மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்வதாக ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்தது. Spinal Muscular Atrophy (SMA) Zolgnesma injection Bharathi’s parents need to raise at least Rs 3.5 cr within a week