மேலும் அறிய

Free Bus: மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்: டோக்கன் பெறுவது எப்படி?- போக்குவரத்துத்துறை அறிவிப்பு

மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் வரும் 21ம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட உள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் வரும் 21ம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 27 பணிமனைகளில் 21ஆம் தேதி முதல் பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டணமில்லாத டோக்கன் மூலம் 6 மாதங்கள் வரை பயணிக்கலாம் என்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6 மாதங்களுக்கு இந்த டோக்கன்களைப் பயன்படுத்தலாம். 

இதுகுறித்து மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகளில்‌ 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ்‌ மூத்த குடிமக்கள்‌ கட்டணமில்லாமல்‌ பயணம்‌ செய்யும்‌ வகையில்‌, கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள்‌ டிசம்பர்‌ 2022 (அரையாண்டிற்கு ஒரு முறை) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அடுத்த அரையாண்டிற்கு ஜனவரி 2023 முதல்‌ ஜூன்‌ 2023 வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள்‌ வீதம்‌, 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள்‌, அடையாள அட்டை புதுப்பித்தல்‌, புதிய பயனாளிக்கு வழங்குதல்‌ ஆகியவை கீழ்க்காணும்‌ 40 மையங்களில்‌, வரும்‌ 21 டிசம்பர்‌ 2022 முதல்‌ 31 ஜனவரி 2023 வரை காலை 08.00 மணி முதல்‌ இரவு 07.30 மணி வரை வழங்கப்படும்‌. அதன்‌ பின்னர்‌, 01.02.2023 முதல்‌ அந்தந்த பணிமனை அலுவலகத்தில்‌, அலுவலக நேரத்தில்‌ வழங்கப்படும்‌.

டோக்கன் பெறுவது எப்படி?

சென்னைவாழ்‌ மூத்த குடிமக்கள்‌, இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள்‌ மற்றும்‌ அடையாள அட்டைகள்‌ புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின்‌ நகலுடன்‌, வயது சான்றாக ஆதார்‌ அட்டை / ஒட்டுநர்‌ உரிமம்‌ / கல்வி சான்றிதழ்‌ / வாக்காளர்‌ அடையாள அட்டையின்‌ நகல்‌ மற்றும்‌ 2 வண்ண பாஸ்போர்ட்‌ அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்‌. 


Free Bus: மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்: டோக்கன் பெறுவது எப்படி?- போக்குவரத்துத்துறை அறிவிப்பு


Free Bus: மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்: டோக்கன் பெறுவது எப்படி?- போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட எதுவாக அவற்றின்‌ அசலை கையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. மேலும்‌, புதுப்பிக்க வரும்‌ மூத்த குடிமக்கள்‌, தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன்‌ தற்போதைய பாபோர்ட் அளவிலான ஒரு புகைப்படம்‌ மட்டும்‌ கொண்டு வர வேண்டும்‌''.

இவ்வாறு மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
“தமிழ் மொழி குறித்து தவறான பேச்சு, உடனே மன்னிப்பு கேளுங்க” - அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆவேசம்
“தமிழ் மொழி குறித்து தவறான பேச்சு, உடனே மன்னிப்பு கேளுங்க” - அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆவேசம்
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Udumalpet Power Cut: உடுமலைப்பேட்டையில் நாளை (12-08-2026) எங்கெல்லாம் மின்தடை! இதோ லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை (12-08-2026) எங்கெல்லாம் மின்தடை! இதோ லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget