மேலும் அறிய

தஞ்சையில் இதய நோயாளிக்கு ரத்தம் வழங்குவதாக கூறி கூகுள் பே மூலம் பணம் வாங்கி மோசடி...!

’’மற்றொரு செல்போனிலிருந்து அழைத்து, கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பும் படி கேட்டபோது. என்னால் தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று ஒருமையில் பேசியுள்ளார்’’

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த ஆவணம் கிராமத்தைச் சார்ந்த அப்துல்மஜீத் (57) இருதய நோயாளி, இவருக்கு இருதய நோயால் அவதிக்குள்ளானதால், இதய அறுவை சிகிச்சை செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி  அன்று திருச்சி காவேரி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு இரத்தம் அதிகமாக தேவைப்பட்டதால் அக்குடும்பத்தினர் செய்வதென்று தெரியாமல் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை தொடர்பு கொண்டு இரத்தம் கேட்டுள்ளனர்.

பலர் இலவசமாக இரத்தம் தானம் செய்ய முன்வந்துள்ளனர் ஆனாலும் சிகிச்சைக்கான இரத்தம்  போதவில்லை. எப்படியாவது ரத்தம் ஏற்பாடு செய்து, அப்துல்மஜீத்தை காப்பாற்றி விட வேண்டும் என பல்வேறு வகையில் ரத்தம் வழங்குபவர்கள் குறித்து கேட்டு வந்தனர். அப்போது கார்த்திக் என்ற நபர் மூன்று யூனிட் இரத்தம் ஏற்ப்பாடு செய்து தருவதாக கூறி ஒரு யூனிட்டுக்கு 2000 என்ற கணக்கில் மூன்று யூனிட்க்கு ரூ. 6000  Google Pay (9791590903) உடனடியாக போட சொன்னான். ரத்தம் கிடைக்காத பட்சத்தில் ஒருவர் நல்ல மனித நேயத்தடன், பணம் வாங்கினாலும், ரத்தம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என அப்தல்மஜீத் குடும்பத்தினர் கார்த்திக்கை நம்பி, 6000  போட்டுள்ளனர்.

தஞ்சையில் இதய நோயாளிக்கு ரத்தம் வழங்குவதாக கூறி கூகுள் பே மூலம் பணம் வாங்கி மோசடி...!

ஆனால், அறுவை சிகிச்சைக்கான குறித்த நேரத்தில் வரவில்லை, போனும் சுவிட்ச் ஆப்  செய்திருந்தான். இதனால் ஆப்ரேஷன் தள்ளிப்போனதால் உடல் நிலை மோசமாகி உயிருக்கு ஆபத்தான நிலையை அடைந்தது. பின்னர், மருத்தவர்கள் ரத்தம் கட்டாயமாக கொண்டு வந்தால், தான் உயிர் பிழைக்க வைக்க முடியும். அதனால் உடனடியாக ரத்தத்திற்கு ஏற்பாடு செய்யங்கள் என்றார். அதற்குள் இரண்டு நாளுக்க பிறகு இரத்தம் ஏற்பாடு செய்து ஆப்ரேஷன் செய்யப்பட்டது. கார்த்திக்கை, செல்போனில் தொடர்பு கொண்ட போது, போனை எடுக்காமல் இருந்துள்ளார். பின்னர் மற்றொரு செல்போனிலிருந்து அழைத்து, கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பும் படி கேட்டபோது. என்னால் தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று ஒருமையில் பேசியுள்ளார்.

தஞ்சையில் இதய நோயாளிக்கு ரத்தம் வழங்குவதாக கூறி கூகுள் பே மூலம் பணம் வாங்கி மோசடி...!

பின்னர், இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகத்தினரிடம் கூறினர். நிர்வாகிகள், பணத்தை பெற்று கொண்ட கார்த்திக் என்ற நபரிடம் போன் மூலமாக விசாரணை செய்த போத, 6000  பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறினார். ஆனால் இதுவரை திருப்பி பணம் கொடுக்கவில்லை. செல்போனும் ஸ்வீட்ச் ஆகியிருந்தது. இதனையடுத்து, ரத்தம் வழங்குவதாக பணத்தை பெற்று கொண்டு, ரத்தம் வழங்காமல், ஒருவரது உயிரை பற்றி கவலைப்படாமல் ஏமாற்றிய  கார்த்திக் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாக சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 பின்னர் நிர்வாகிகள் கூறுகையில்,       

இனி வரும் காலங்களில் தனிநபர்கள் மூலம் இரத்தம் பெற்றுதருகின்றோம் என பணம் கேட்டால் கொடுத்துவிடாதீர்கள், விசாரித்து நிதானமாக செயல்படவும், எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வோடு இருக்கவும், பணத்தை ஏமாற்றுபவர்களுக்கு உயிருக்காக போராடி வருபவர்களை பற்றி கவலை கிடையாது. எனவே, போலீசார் இது போன்ற உயிருடன் விளையாடும் நபர்களை பிடித்து, நோயாளிகளுக்கு சேவை செய்யும் தண்டனையை வழங்க வேண்டும். அப்போது தான் அதன் வலிகள் தெரியும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget