மேலும் அறிய

Fortified Rice: பொது விநியோகத் திட்டம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவது ஏன்...தமிழ்நாடு அரசு விளக்கம்..!

இரும்புச் சத்து, ஃபோலிக்அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி  ரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்க செறிவூட்டப்பட்ட அரிசி உதவிகரமாக இருக்கும்.

பொது விநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டுவருகிறது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த விளக்கத்தில், "செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணூட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை,  சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில்  கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக  மாற்றி, பொதுவிநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள நுண்ணூட்டச்சத்தின் பயன்கள் விவரம் .

நுண்ணூட்டச்சத்தின் பெயர் பயன்கள்

இரும்புச் சத்து - ரத்தச் சோகையைத்  தடுக்கிறது.

ஃபோலிக் அமிலம் - கருவளர்ச்சிக்கும்   இரத்த உற்பத்திற்கும் உதவுகிறது.

வைட்டமின் பி12 - நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

இத்திட்டம் தமிழ்நாட்டில்   கடந்த 21.09.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  அறிமுகத் திட்டமாக (Pilot Scheme) கொண்டுவரப்பட்டது. செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்ட நிலையில், 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது.  

இதனை மத்திய அரசு நிலை – I, நிலை – II மற்றும்  நிலை  -III  ஆகிய 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிலை – I: மத்திய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

நிலை – II: மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள்ளது. அவற்றில தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வு செய்தது. இம்மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு  01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி  வழங்கப்பட்டு வருகிறது.

நிலை – III:           மார்ச் 2024–க்குள் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோகதிட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதார்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து, ஃபோலிக்அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி  இரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ  செறிவூட்டப்பட்ட அரிசி உதவிகரமாக இருக்கும், இவற்றினை பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது"

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Aishwarya Rajinikanth:மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
Aishwarya Rajinikanth:மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
Embed widget