மேலும் அறிய

Mettur Dam: இரண்டாவது நாளாக 89 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 89 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக 89 கன அடியாக நீடித்து வருகிறது. 

Mettur Dam: இரண்டாவது நாளாக 89 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 40.26 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 12.22 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டு போதிய நீர் மேட்டூர் அணையில் இல்லாத காரணத்தினால் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: இரண்டாவது நாளாக 89 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget