Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது. அதே நேரம் 'குறிஞ்சி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொளத்தூர் நிலையம் முதல் ஸ்ரீனிவாசா நகர் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக சென்று சேர பெரும் உதவியாக உள்ளது. எனவே சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் நிலையில், கொளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியானது முடிவடைந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கட்டம் 11-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களும் (5.8 கி.மீ) 39 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களும் (41.2 கிமீ) அமைக்கப்படவுள்ளது.
கொளத்தூரில் சுரங்கம் தோண்டும் பணி
5.8 கி.மீ நீளம் கொண்ட இந்த கரங்கப்பாதை பிரிவுக்கு குறிஞ்சி முல்லை. மருதம், நெய்தல் என 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன. வழித்தடம் 5-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை (Downline) 246 மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை 23:05 2025 அன்று தொடங்கி கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை 1.8 மீட்டர் மிகக் குறைந்த சுமை (extremely low vestunten). 3.8% செங்குத்தான சாய்வு (steep gradient) மற்றும் அதிக போக்குவரத்துக்கு உட்பட்ட உள்வட்டச் சாலையின் (IRR Inner Ring Road) நடுவில் தரைப் பாதுகாப்புக்கான தேவை போன்ற அனைத்து சவால்களையும் கடந்து பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் கரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.
புதிய சாதனை படைத்த சென்னை மெட்ரோ ரயில்
மேலும் அதே நேரத்தில், "குறிஞ்சி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொளத்தூர் நிலையம் முதல் ஸ்ரீனிவாசா நகர் வரை 1960 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது இந்த கரங்கம் தோண்டும் இயந்திரம் கடினமான பாறைகள் (Kinde 304 rucky strata) மற்றும் 2310 மீட்டர் நீளத்திற்குச் கூர்மையான வளைவுகளையும் (Sharp Curve) கடந்து செல்லும். ஒரே மெட்ரோ நிலையத்தில் (கொளத்தூர் மெட்ரோ) ஒரே நேரத்தில் ஒரு கரங்கம் தோண்டும் இயந்திரம் TBM-Kur) சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியிருப்பதும் மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் (TBM-Mullai) தனது பணியை முடித்து வெளியே வந்திருப்பதுமான (Breakthrough) இந்த இரட்டைச் செயல்முறை நம் இந்திய நாட்டில் இதுவே முதல் முறை இது ஒரு தனித்துவமான சாதனையாகும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.






















