மேலும் அறிய

லஞ்சம் கொடுக்க மறுத்ததால், பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றி பதிவிட்ட கொடுமை..!

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை மாற்றி பதிவிட்டு ஊழியர் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 30), கார் டிரைவர். இவருக்கும், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த தீபலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபலட்சுமியை பிரசவத்திற்காக கடந்த மே மாதம் 29-ந் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் ராஜவேல் அனுமதித்துள்ளார். அங்கு தீபலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு வேல்முருகன் என பெயர் சூட்டினர். தொடர்ந்து குழந்தையின் பிறப்பை பதிவு செய்த ராஜவேல், பிறப்பு பதிவு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார்.

லஞ்சம் கொடுக்க மறுத்ததால், பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றி பதிவிட்ட கொடுமை..!

அதற்கு சான்றிதழ் வழங்க அங்கிருந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு ராஜவேல் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மருத்துவமனை ஊழியர், ராஜவேலுவுக்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வழங்காமல் அவரை சில நாட்கள் அலைக்கழிப்பு செய்துள்ளார். அதன் பின்னர் நேற்று ராஜவேலுக்கு மருத்துவமனையில் இருந்து சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை பார்த்ததும் ராஜவேலு அதிர்ச்சியடைந்தார். அதில் குழந்தையின் தந்தை பெயரில் ராஜவேல் என்பதற்கு பதிலாக ராஜசேகர் என்று மாற்றி பதிவு செய்து சான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது.  இதுபற்றி அவர், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் முறையிட்டதற்கு சரிவர பதில் தெரிவிக்கவில்லை.

லஞ்சம் கொடுக்க மறுத்ததால், பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றி பதிவிட்ட கொடுமை..!

இதனால் மனவேதனை அடைந்த ராஜவேல், இதுபற்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகாரை கொடுத்தார். அந்த மனுவில், நான் எனது மனைவி தீபலட்சுமியை பிரசவத்திற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு அவருக்கு பிரசவம் பார்க்க 500 ரூபாய் வரை கேட்டனர். நான் பணம் கொடுக்க மறுத்து விட்டேன். பின்னர் குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது அதற்கும் பணம் கேட்டனர். நான் தர மறுத்ததால் என்னை சில நாட்கள் அலைக்கழிப்பு செய்து வந்த நிலையில், தற்போது கொடுத்த சான்றிதழில் எனது பெயரை மாற்றி பதிவு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். நான் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயரை தெளிவாக தமிழில் எழுதி கொடுத்தபோதிலும் சான்றிதழுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்திற்காக வேண்டுமென்றே எனது பெயரை மாற்றி பதிவு செய்துள்ளனர்.

லஞ்சம் கொடுக்க மறுத்ததால், பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றி பதிவிட்ட கொடுமை..!

இது பழிவாங்கும் செயல். இந்த செயலில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினர். பொதுமக்கள் தங்கள் புகார்களை சென்னை தலைமை அலுவலக போன் எண்கள் 044-22321085, 22310989, 22331090 என்ற எண்களிலும், விழுப்புரம் மாவட்ட அலுவலக போன் எண் 04146-259216 என்ற எண்களின் புகார்களை தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
"காவல்துறை அராஜகம் ஒழிக" கழிவறையில் சோதனை செய்து பெண்கள் கைது !! கொந்தளித்த ஆர்ப்பாட்டகாரர்கள்
மதுரை அரசு  மருத்துவமனையின் சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !
மதுரை அரசு  மருத்துவமனையின் சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

வீடியோ

கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget