(Source: ECI/ABP News/ABP Majha)
கரூரில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயி 5வது நாளாக உண்ணாவிரதம்
ஆண்டி செட்டிப்பாளையம் முதல் தென்னிலை வரை பொதுமக்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் 110 கே.வி திறன் கொண்ட 49 உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த 8 மாதமாக நடைபெற்று வருகிறது.
கரூரில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்த விவசாயி ராஜாவை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அழைத்துச் சென்றனர்.
கரூர் மாவட்டம், புகலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆண்டி செட்டிப்பாளையம் முதல் தென்னிலை வரை பொதுமக்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் 110 கே.வி திறன் கொண்ட 49 உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த 8 மாதமாக நடைபெற்று வருகிறது. உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பட்டா நிலங்களுக்கு மின்வாரியம் சார்பாக உரிய இழப்பீடு வழங்கப்படும். இந்த நிலையில் 7 இடங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்மின் கோபுரம் திட்டத்தை ரத்து செய்து புதைவடமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும் என்பதற்காக விவசாயி ராஜா தொடர்ந்து ஐந்து நாட்களாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வந்தார் இந்த நிலையில் அவரது உயிருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிப்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்