தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு..

மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு இருந்தாலும், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கேரளா, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், அந்தந்த மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தவதற்காக சில கட்டுப்பாடுகளுடன் கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் நாளை நள்ளிரவு வரை அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..  தமிழக அரசு அறிவிப்பு..

இந்நிலையில், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு இருந்தாலும், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று கூறியுள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர் மட்டும் கலந்துகொண்டு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: Corona Virus tngovt Tamil Nadu curfew Extension

தொடர்புடைய செய்திகள்

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

Metoo | "உண்மைன்னா கேஸ் போட்டு அவர உள்ள தள்ள வேண்டியதுதானே?" - மி டூ-வை விளக்கும் இயக்குநர்

Metoo |

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News : புதுவையில் இன்று 402 பேருக்கு கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : புதுவையில் இன்று 402 பேருக்கு கொரோனா

டாப் நியூஸ்

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

முதலமைச்சர் செல்லும் சாலைகளில், பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தவேண்டாம் என உத்தரவு..!

முதலமைச்சர் செல்லும் சாலைகளில், பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தவேண்டாம் என  உத்தரவு..!