Erode East By-Election Voting LIVE: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவுபெற்றது; 6 மணிக்கு மேல் வாக்களித்ததால் தாமதம்..
Erode East By-election 2023 Voting LIVE Updates: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
LIVE
Background
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் சார்பில் மேனகாவும் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் உள்ளனர்.
களைக்கட்டிய பிரச்சாரம்
இதற்கிடையில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த ஒரு மாத காலமாகவே தீவிரமாக நடைபெற்றது. திரும்பும் இடமெல்லாம் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்தனர். வீட்டுக்கு வெள்ளை அடிப்பது தொடங்கி பாத்திரம் கழுவுவது வரை வித்தியாசமான ஸ்டைலில் கட்சியினர் ஓட்டு சேகரித்து வந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரேமலதா, சுதீஷ், ஜி.கே.வாசன், ஆளுங்கட்சி அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள்,மூத்த நிர்வாகிகள் என பலரும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தனர். இதனிடையே பிரச்சாரம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 25) ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வெளிநபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ள நிலையில், அதனைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவுபெற்றது; 6 மணிக்கு மேல் வாக்களித்ததால் தாமதம்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் வாக்களித்ததால் தாமதமாக முடிவடைந்தது.
Erode East By-Election Voting LIVE: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்... 74.69 சதவீத வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 74.69 சதவிகித வாக்குப்பதிவு - கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 66 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்தது
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; நிறைவடைந்தது வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 6 மணிக்குள் வந்தும் வாக்களிக்காதவர்களுக்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 5 மணிவரை 70.58 % வாக்கு பதிவாகியுள்ளது.
நாகலாந்து - 72.99%, மேகலயா - 63. 91% வாக்குப்பதிவு
இன்று 3 மணிக்குள்ளாக, நாகலாந்தில் - 72.99%, மேகலயாவில் - 63. 91% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது.