இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
தொழில் முதலீடுகள் ஈர்க்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,860.36 கோடி முதலீடுகளுடன் 56,768 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகத்தில் தொழில் முதலீடு
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு வரும், 2030ம் ஆண்டுக்குள் 'ஒரு டிரில்லியன் டாலர்' பொருளாதாரத்தை எட்டும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மூலம் தொழில் முதலீடுகள் ஈர்த்து வருகிறார். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற "TN RISING" முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது,
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 43,844 கோடி முதலீட்டிற்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரையில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார்கள். 63,696 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி ரூ.3,065 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இறுதியாக ரூ.36,860.36 கோடி முதலீடுகளுடன் 56,768 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் மாபெரும் முதலிட்டாளர்கள் மாநாடு 2025 இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.36,860.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளில் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது. அத்துடன், மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இந்த நிகழ்வில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.





















