TN Weather Update: மண்டையை பிளக்கும் வெயில்.. வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கும்.. சூடான வானிலை அப்டேட் இதோ..
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.06.2023 முதல் 16.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
13.06.2023 & 14.06.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
அவலாஞ்சி (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 6, கெட்டி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 5, செங்கம் (திருவண்ணாமலை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), நம்பியூர் (ஈரோடு), பெருங்களூர் (புதுக்கோட்டை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கிண்ணக்கொரை (நீலகிரி) தலா 4, புதுக்கோட்டை, வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), மேல் பவானி (நீலகிரி), செம்மேடு (விழுப்புரம்), குழித்துறை (கன்னியாகுமரி), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), வேடசந்தூர் கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), லால்பேட்டை (கடலூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பார்வூட் (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), மலையூர் (புதுக்கோட்டை), பாலமோர் (கன்னியாகுமரி), ஒகேனக்கல் (தருமபுரி) தலா 3 செ. மீ மழை பதிவாகியுள்ளது.
New India Assurance: இந்தி திணிப்பா..! மன்னிப்பு கோரியது நியூ அஷ்யூரன்ஸ் நிறுவனம்