School Leave: கன்னியாகுமரி மாவட்டம் - தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..
கன்னியகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுமுறை என கன்னியாகுமரி மாவட்ட ஆடசியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் தொடங்கிய முதல் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. செப்டம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை இருந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக குமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல் குமரி கடற்கரை பகுதிகளில் கற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் காரணத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள்:
03.10.2023: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
03.10.2023: மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.10.2023: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05.10.2023 மற்றும் 06.10.2023: தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 மிமீ மழை பதிவாகியுள்ளது. வரும் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை இயல்பை விட அதிகமாக பதிவானதாகவும் வட கிழக்கு பருவ மழை காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழையின் அளவு குறைவாக தான் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் மாதம் முதல் அதிக மழை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.