குஷ்பு குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட எம்.பி. கனிமொழி..என்ன நடந்தது?
நடிகையும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெண்களை ஆபாசமாக பேசும் பழக்கம் சமூகத்தில் புரையோடி கிடக்கிறது. எவ்வளவு அதிகாரமிக்க பதவிகளுக்கு சென்றாலும் பெண்கள் இம்மாதிரியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, நடிகைகளை மோசமான வார்த்தைகளை சொல்லி திட்டுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இச்சூழலில், நடிகையும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, அமைச்சரை மேடையில் வைத்து கொண்டு குஷ்பூவை மோசமான வார்த்தைகளை கொண்டு திமுக பேச்சாளர் பேசி இருக்கிறார். அவரை கண்டிக்காமல், அமைச்சர் சிரிப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் குஷ்பூ, நமீதா, காயத்ரி ரகுராம், கெளதமி ஆகியோர் குறித்து திமுக பேச்சாளர் மிக மோசமான வார்த்தைகளை கொண்டு ஆபாசமாக பேசுகிறார். அப்போது, மேடையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமர்ந்திருக்கின்றனர். பேச்சாளர் பேசியதை கேட்டு அவர்கள் அனைவரும் சிரிக்கின்றனர்.
When men abuse women,it just shows wat kind of upbringing they have had & the toxic environment they were brought up in.These men insult the womb of a woman.Such men call themselves followers of #Kalaignar
— KhushbuSundar (@khushsundar) October 27, 2022
Is this new Dravidian model under H'ble CM @mkstalin rule?@KanimozhiDMK
இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதுகுறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு பெண்ணை ஒரு ஆண் ஆபாசமாக பேசும்போது, அவர் எப்படி வளர்க்கப்பட்டார். எந்த மாதிரியான நச்சுத்தன்மையான சூழலில் வளர்க்கப்படுகிறார் என்பதே தெரிய வருகிறது. இம்மாதிரியான ஆண்களே, பெண்ணின் கருப்பையை கொச்சைப்படுத்துகிறார்கள்.
இம்மாதிரியான ஆண்கள், தங்களை கலைஞரின் தொண்டர்கள் என சொல்லி கொள்கிறார்கள். இதுதான் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடல் ஆட்சியா?" என கேள்வி எழுப்பியிருந்தார். திமுக எம்.பி. கனிமொழியை டேக் செய்து குஷ்பூ இந்த பதிவை வெளியிட்டிருந்தார்.
இதற்கு தற்போது பதில் அளித்துள்ள கனிமொழி, பகீரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,"ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். யார் அப்படி பேசி இருந்தாலும் எங்கு பேசி இருந்தாலும் அவர் எந்த கட்சியாக இருந்தாலும் அதை பொறுத்து கொள்ள முடியாது.
I apologise as a woman and human being for what was said.This can never be tolerated irrespective of whoever did it,of the space it was said or party they adhere to.And I’m able to openly apologise for this because my leader @mkstalin and my party @arivalayam don’t condone this. https://t.co/FyVo4KvU9A
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 27, 2022
இம்மாதிரியான செயல்களை, எங்கள் தலைவர் ஸ்டாலினும் திமுகவும் ஏற்று கொள்ளாததால் என்னால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க முடிகிறது" என பதிவிட்டுள்ளார்.