மேலும் அறிய

Udhayanithi; திமுக-வை வலுப்படுத்த உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு? விரைவில் வழங்க மு.க.ஸ்டாலின் முடிவு!

திமுக-வை மேலும் வலுப்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு திமுக-வில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். தவெக மீதான எதிர்பார்ப்பு, விஜய்யின் செல்வாக்கு ஆகியவற்றை தாண்டி திமுக நிர்வாகிகள் பல இடங்களில் முறையாக பணியாற்றாததும் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மறுசீரமைப்புக்கு தயக்கம்:

இதையடுத்து, கட்சி மறுசீரமைப்புக்குழுவை உருவாக்கினார் மு.க.ஸ்டாலின். இந்த குழு தேர்தல் தோல்விக்கு காரணமான 20 மாவட்டச் செயலாளர்களின் பதவியை பறிக்க பரிந்துரைத்ததுடன், மாவட்டச் செயலாளர்களின் கீழ் உள்ள அதிக தொகுதிகளை குறைக்கவும் பரிந்துரைத்தது. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திமுக தலைமை தயக்கம் காட்டி வருகிறது. 

இந்த சூழலில், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். காவிரி போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், அவர் விடுவிக்கப்பட்ட பிறகு தஞ்சையில் அவருக்கு கிடைத்த வரவேற்பை திமுக-வினர் பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். 

செயல் தலைவராகிறாரா உதயநிதி?

இதை திமுக-வினர் தங்களுக்கு சாதகமாக இணையதளத்தில் பகிர்ந்து வரும் சமயத்தில் இந்த விவகாரத்தை பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். உதயநிதியின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மு.க.ஸ்டாலின் தற்போது கட்சியின் தலைவராக மட்டும் உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதியை திமுக செயல்தலைவராக நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் முறையாக பணியாற்றாத பல சீனியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி முனைப்புடன் உள்ளார். மேலும், அவர்களுக்கு மாற்றாக புதிய நிர்வாகிகளையும் நியமிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

காத்திருக்கும் சம்பவம்:

நடவடிக்கைக்கு பயந்த மூத்த உறுப்பினர்கள் பலரும் மு.க.ஸ்டாலினிடம் தங்கள் பதவியை தக்க வைக்க முறையிட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலினும் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உதயநிதி செயல் தலைவராக பொறுப்பேற்றால் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

திமுக-வின் எதிர்காலத்தை கருதி உதயநிதியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கவும் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இனி வரும் தேர்தல்களில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை உதயநிதியிடம் ஒப்படைக்கும் வகையில் அவருக்கு பல்வேறு சுதந்திரம் வழங்கவும் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi; திமுக-வை வலுப்படுத்த உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு? விரைவில் வழங்க மு.க.ஸ்டாலின் முடிவு!
Udhayanithi; திமுக-வை வலுப்படுத்த உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு? விரைவில் வழங்க மு.க.ஸ்டாலின் முடிவு!
TN weather: அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... எங்கெல்லாம்? வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... எங்கெல்லாம்? வானிலை மையம் எச்சரிக்கை
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
Embed widget