மேலும் அறிய

Diwali 2024 : மணக்குள விநாயகர் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை: சாமி தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள்

மூலவர் வெள்ளிக்கவசத்திலும், உற்சவர் அலங்காரத்துடன் காட்சி அளித்த நிலையில், பக்தர்கள் பக்தியுடன் விநாயகரே வழிபட்டு செல்கின்றனர்.

மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மனக்ககுள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பண்டிகை நாட்களில் பக்தர்கள் விநாயகர் வழிபட்டு தங்களது பணிகளை துவங்கவது வாடிக்கையாக வைத்துள்ளனர். அதன்படி தீபாவளி திருநாளில் விடியற்காலை முதல் பக்தர்கள் கங்கா ஸ்தானம் எடுத்து புத்தாண்டு அணிந்து இனிப்புகள் உண்டு தீபாவளியை கொண்டாடி வரும் நிலையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலிலும் பக்தர்கள் விநாயகரே வழிபட்டு வருகின்றனர்.

மூலவர் வெள்ளிக்கவசத்திலும் உற்சவர் அலங்காரத்துடன் காட்சி அளித்த நிலையில், பக்தர்கள் பக்தியுடன் விநாயகரே வழிபட்டு செல்கின்றனர். இன்று மாலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உற்சவர் வெளி புறப்பாடும் நடைபெற உள்ளது.

வெள்ளைக்கார பிள்ளையார்

மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது. மணக்குள விநாயகர் கோயில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மணக்குள விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். பாண்டிச்சேரியில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 7913 சதுர அடி பரப்பளவில் இக்கோவில் பரந்து விரிந்துள்ளது. மணலைக் குறிக்கும் ‘மணல்’ மற்றும் கடலுக்கு அருகில் உள்ள குளத்தைக் குறிக்கும் ‘குளம்’ ஆகிய இரண்டு தமிழ் வார்த்தைகளிலிருந்து மணக்குள என்ற பெயர் வந்தது. மணக்குள விநாயகர் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.

இன்று இக்குளம் இல்லை. ஆனாலும் மூலவருக்கு அருகே இடது புறத்தில் ஒரு சிறிய சதுர அளவில் அன்றைய மணற்குளம் இன்றும் உண்டு. இங்கு கடல் வெகு அருகில் இருந்தபோதும் சுத்தமான நீர் இதில் சுரக்கிறது. இதில் எது போட்டாலும் நிறம் கறுப்பாக மாறிவிடும். தீராத நோய்களையும் இந்த நீர் தீர்க்கும் என்பது நம்பிக்கை. தடங்கல் ஏற்பட்டு திருமணம் தள்ளிக்கொண்டே இருப்பவர்களுக்கு இவரை தரிசனம் செய்தால் திருமணம் வெகுவிரைவில் கூடும். மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் சிறப்புகள்

  1. இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும் தான் உள்ளது .
  2. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார்.
  3. மணக்குள விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின், இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறைய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.
  4. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்றபெயரும் ஏற்பட்டது.
  5. புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.
  6. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.
  7. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.
  8. இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும்.
  9. மணக்குள விநாயகர் ஆலயத்தின் தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.
  10. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.
  11. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.
  12. திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாடு என இத்தலத்திற்கு பக்தர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.
  13. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Chennai Air Quality: கொளுத்தும் பட்டாசு! சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம் - அச்சச்சோ!
Chennai Air Quality: கொளுத்தும் பட்டாசு! சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம் - அச்சச்சோ!
Diwali Non Veg Celebration : பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..
பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்Annapoorani Arasu Amma : லிஸ்ட் பெருசா போகுதே 3வது திருமணத்திற்கு ரெடியான சர்ச்சை சாமியார் அன்னபூரணிPinarayi Vijayan Accident : விபத்தில் சிக்கிய பினராயி ஒன்றோடு ஒன்று மோதிய கான்வாய் பரபரப்பான கேரளா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Chennai Air Quality: கொளுத்தும் பட்டாசு! சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம் - அச்சச்சோ!
Chennai Air Quality: கொளுத்தும் பட்டாசு! சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம் - அச்சச்சோ!
Diwali Non Veg Celebration : பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..
பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..
Rajini Wish Vijay:
Rajini Wish Vijay: "தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி" விஜய்யை வாழ்த்திய ரஜினிகாந்த்!
Amaran Twitter Review : துப்பாக்கியை தக்கவைத்து கொண்டாரா சிவகார்த்திகேயன்? அமரன் பட ட்விட்டர் விமர்சனம் சொல்வது என்ன?
துப்பாக்கியை தக்கவைத்து கொண்டாரா சிவகார்த்திகேயன்? அமரன் பட ட்விட்டர் விமர்சனம் சொல்வது என்ன?
IPL Retention 2025: இன்று ஐ.பி.எல். ரிட்டன்ஷன்! எத்தனை மணிக்கு? எப்படி பார்ப்பது? முழு விவரம்
IPL Retention 2025: இன்று ஐ.பி.எல். ரிட்டன்ஷன்! எத்தனை மணிக்கு? எப்படி பார்ப்பது? முழு விவரம்
Lucky Bhaskar Twitter Review : தீபாவளி ரேஸில் தாக்குபிடிப்பாரா துல்கர் சல்மான்...லக்கி பாஸ்கர் விமர்சனம் சொல்வது என்ன
Lucky Bhaskar Twitter Review : தீபாவளி ரேஸில் தாக்குபிடிப்பாரா துல்கர் சல்மான்...லக்கி பாஸ்கர் விமர்சனம் சொல்வது என்ன
Embed widget