Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் பொருட்கள் வாங்காதவர்களுக்காக வரும் 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகள் இயங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பணன் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை தமிழ்நாட்டிலும் மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பருப்பு, பாமாயில் உள்ள குடிமைப் பொருட்கள் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
27ம் தேதி நியாய விலைக்கடைகள்:
நியாய விலைக்கடைகளில் மக்கள் தடையின்றி பொருட்களைப் பெற வேண்டும் என்பதற்காக வரும் ஞாயிறு கிழமையில் ( அக்டோபர் 27ம்) தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடைகள் தடையின்றி செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பணன் தெரிவித்துள்ளார்.
அரசு சார்பில் நியாய விலைக்கடைகள் இயங்கி வருகிறது. நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு அடிப்படைத் தேவையான அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியவை விநியோகிக்கப்படுவது வழக்கம்.
ரேசன் பொருட்கள் வாங்காதவர்களுக்காக:
தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் மக்கள் தங்கள் வீடுகளில் பலகாரங்கள் செய்வது வழக்கம் ஆகும். இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கான பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்கள் அரசு நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து வழங்கப்படுவது வழக்கம் ஆகும்.
இந்த மாதம் வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் மாதத்திற்கான குடிமைப்பொருட்கள் ஏற்கனவே நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் சில வாடிக்கையாளர்கள் ரேசன் பொருட்கள் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரேசன் பொருட்கள் வாங்காதவர்களுக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும் என்ற அறிவிப்பை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பணன் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பினால், ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் தீபாவளி பண்டிகைக்காக 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக விடப்பட்டுள்து என்பது குறிப்பிடத்தக்கது.