Diwali Special Bus: சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் கவனத்திற்கு... சிறப்பு பேருந்துகளும், பஸ் நிலையங்களும்... முழு விவரம்!
தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்து நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்து நிலையங்கள் மற்றும் கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்கள் கூட்டத்தை, ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், கூடுதலான பேருந்துகளை இயக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வரும் 21 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் சென்னையில் இருந்து ஐந்து இடங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் புறப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாதவரம் பேருந்து நிலையம்:
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.கே.நகர். மா.ந.போ.கழக பேருந்து நிலையம்:
ECR வழியாக புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர். மா.ந.போ.கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்:
திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்:
திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருத்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகள்., திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரிகடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம்:
வேலூர். ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம் செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி செல்லும் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு:
மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி,ராமநாதபுரம், சேலம்,கோவை, பெங்களூர் செல்லும் பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு சிறப்பு மையங்கள்
முன்பதிவு சிறப்பு மையங்கள் செயல்படும் நாட்கள் (21/10/2022 முதல் 23/10/2022 வரை) (காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை)
முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்கள்:
1.புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் - 10 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
2.MEPZ தாம்பரம் சானிடோரியம்- ஒரு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app, மற்றும் www.tnstsc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Also Read:Diwali 2022 Bonus: அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 % தீபாவளி போனஸ்