மயிலாடும்பாறை அகழாய்வில் மண் குடுவைகள் கண்டெடுப்பு.!
கிருஷ்ணகிரி மயிலாடும்பாறையியின் அகழாய்வில் மூன்று கால்களுடன் கூடிய மண் குடுவைகள், மண் குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் மேற்கொண்ட அகழாய்வில் மூன்று கால்களுடன் கூடிய மண் குடுவைகள், மண் குவளை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
தமிழகத்தில் மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூா், கொடுமணல், மணலூா் ஆகிய 10 இடங்களில் தற்போது அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில், கடந்த மாா்ச் முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.தொல்லியல் துறையின் துணை இயக்குநா் சிவானந்தம் தலைமையில் மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநா் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலா்கள், தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனா். இந்த அகழாய்வில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு கல்திட்டை பகுதியில் உடைந்த நிலையில் 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாளும் நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டன.அதே பகுதியில் உள்ள கல்திட்டையில் தற்போது மூன்று கால்களுடான மண் குடுவைகள், உடைந்த நிலையில் உள்ள மண் குவளைகள், மற்றும் இரும்புக் கத்திகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மயிலாடும்பாறை : 2,500 ஆண்டு பழமைவாய்ந்ததாக கருதப்படும் வாள் மற்றும் மண்பானை கண்டுபிடிப்பு! https://t.co/E31WCA8qfV
— Vinoth (@Vinoth05503970) July 29, 2021
இது குறித்து அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது:-
பர்கூர் தாலுகா மயிலாடும்பாறையில், சானரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்களை டி.என்.ஏ. பரிசோதனை செய்து, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறை கண்டறியப்படவுள்ளது. தற்போது இங்கு பெருங்கற்காலத்தை சேர்ந்த, 70 சென்டி மீட்டர் நீளமுள்ள இரும்பு வாள் மற்றும் 50 சென்டிமீட்டர் உள்ள மண்பானை உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்பானையில் என்ன இருக்கு என்பது தெரிவில்லை, இதில் எலும்பு கூடுகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த பொருட்கள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என கருதப்படுகிறது. இதுகுறித்த முடிவுகள் வந்த பிறகுதான் இந்த சரியான காலத்தை கணிக்க முடியும் என தெரிவித்தார். கல்திட்டையில் தற்போது மூன்று கால்களுடான மண் குடுவைகள், உடைந்த நிலையில் உள்ள மண் குவளைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு தொடர்ச்சியாக அகழாய்வு ஆராய்ச்சி பணிகள் நடைப்பெற்று வரும் இன்னும் பல நூற்றாண்டுக்கு முந்தைய கால நாகரீகத்தை கண்டறிய முடியும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் கண்டறிய முடியும்
கீழடி போல எல்லா இடங்களிலும் அகழாய்வு; அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை !