C.S Amudhan on MK stalin swearing : “ஜோதிடம், மோசடி என்பது நிரூபணமாகிவிட்டது” - முதல்வர் மு.க ஸ்டாலின் பதவியேற்பு குறித்து சி.எஸ் அமுதன் ட்வீட்

முதல்வர் ஆவதற்கு ராசி வேண்டும், மு.க ஸ்டாலினுக்கு ராசி இல்லை என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், அவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”.... என்று உறுதி மொழி ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதைப்பார்த்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் உகுத்தார். அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலினும் ஆனந்த கண்ணீருடன் தனது தந்தை பதவியேற்பதை பார்த்தார். தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதையடுத்து அவரது காரில் இருந்த திமுக கொடி எடுக்கப்பட்டு, தேசியக் கொடி பொறுத்தப்பட்டது.

C.S Amudhan on MK stalin swearing : “ஜோதிடம், மோசடி என்பது நிரூபணமாகிவிட்டது” - முதல்வர் மு.க ஸ்டாலின் பதவியேற்பு குறித்து சி.எஸ் அமுதன் ட்வீட்

முதல்வர் ஆவதற்கு ராசி வேண்டும், மு.க ஸ்டாலினுக்கு ராசி இல்லை என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள பிரபல தமிழ்ப்பட இயக்குனர், சி.எஸ் அமுதன், “ஜோதிடம் ஃபிராடு என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகிவிட்டது” என பதிவிட்டுள்ளார். இதேபோன்ற கருத்துக்கள் சமூக வலைதளத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில்,  தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு நடிகர் சூர்யா இன்று வாழ்த்து கூறியுள்ளார்.  ‘முடியுமா நம்மால்?’ என்பது தோல்விக்கு முன்பு தயக்கம்… ’முடிந்தே தீருவோம்!’ என்பது வெற்றிக்கான தொடக்கம்…  ‘முத்தமிழ் அறிஞர்’ கலைஞர் கூறியதை தனது வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.

திமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சி.எஸ் அமுதல் தொலைக்காட்சி தேர்தல் பரப்புரைகளுக்கான வீடியோக்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Stalin chief minister cinema kollywood

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

‛செக்ஸ் டார்ச்சர்’ டாக்டர் மதுரைக்கு பணியிட மாற்றம்

‛செக்ஸ் டார்ச்சர்’ டாக்டர் மதுரைக்கு பணியிட மாற்றம்

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !

ஓன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

ஓன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

Tamil In Temples | கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக நாளை மறுநாள் ஆலோசனை!

Tamil In Temples | கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக நாளை மறுநாள் ஆலோசனை!

டாப் நியூஸ்

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Apple ios 15 : வெளியானது ஐஓஎஸ்15 அப்டேட்! என்னென்ன வசதிகள் இருக்கு ?

Apple ios 15 : வெளியானது ஐஓஎஸ்15 அப்டேட்! என்னென்ன வசதிகள் இருக்கு ?

‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்