மேலும் அறிய

திண்டுக்கல்லில் நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படும் சிறுமி - 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு

’’இந்த வினோத வழிபாட்டின் 8 ஆவது நாள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்வது வழக்கம்; அந்த பெண் 3 ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக இருப்பார்’’

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமத்தில் தை பூசத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும், மழை வேண்டியும், உலக அமைதி வேண்டியும் வழிபாடு நடைபெற்றது. நிலா பெண் யார் என்பதை தேர்வு செய்யும் சடங்குகள் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. இதற்காக ஊரில் உள்ள சிறுமிகள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் மாசடச்சியம்மன் கோயிலுக்கு பால் கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து 7 நாட்கள், தங்களது வீடுகளில் இருந்து சிறுமிகள் பலவகை சாதம் தயார் செய்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் அந்த சாதத்தை ஒன்றாக சேர்த்து அதன் ஒரு பகுதியை கோவிலில் படைத்து விளக்கேற்றி சிறுமிகள் வழிபாடு செய்தனர். 


திண்டுக்கல்லில் நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படும் சிறுமி - 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு

பின்னர் அந்த சாதத்தை சிறுமிகள் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர். இந்த வினோத வழிபாட்டின் 8 ஆவது நாள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்வது வழக்கம். அந்த பெண் 3 ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக இருப்பார்.  அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 ஆவது நாள் வழிபாட்டில் தூங்காமல் இருந்த அந்த கிராமத்தை சேர்ந்த விசுவநாதன்- விசாலாட்சி தம்பதியின் மகள் பிரதிக்‌ஷா (11) என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டாள்.


திண்டுக்கல்லில் நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படும் சிறுமி - 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு

இதை தொடர்ந்து நிலா பெண்ணாக தேர்வு செய்த பிரதிக்‌ஷாவை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை அமர வைத்து ஆவாரம் பூக்களை பறித்து வந்தனர். அந்த பூக்களை மாலையாக தொடுத்து நிலா பெண்ணான சிறுமிக்கு அணிவித்தனர். சிறுமியின் தலை, கைகளிலும் ஆவாரம் பூவை சூட்டி அலங்கரித்தனர். பின்னர் ஒரு கூடையில் ஆவாரம் பூக்களை நிரப்பி அதனை சிறுமியின் தலை மீது வைத்தனர். அந்த கூடையை சுமந்தபடி சிறுமி ஊர்வலமாக கோட்டூருக்கு அழைத்து வரப்பட்டாள்.


திண்டுக்கல்லில் நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படும் சிறுமி - 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு

ஊர் மக்கள் சார்பில் தாரை, தப்பட்டை முழங்க சிறுமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று தோழிகளுடன் நிலா பெண்ணான சிறுமியை அமர வைத்தனர். அங்கு கும்மி அடித்து ஆண்கள், பெண்கள் பாட்டுப்பாடி சிறுமியை சுற்றி வந்தனர்.   பின்னர் மாசடச்சியம்மன் கோவிலுக்கு சிறுமியை அழைத்து வந்தனர். அங்கு சிறுமியின் முறை மாமன்கள் சேர்ந்து பச்சை தென்னை மட்டையால் குடிசை அமைத்தனர். அங்கு சிறுமியை அமர வைத்து சடங்குகள் செய்தனர்.  அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். குடிசையில் இருந்த சிறுமியை வெளியே அழைத்து வந்தனர். அங்கு கோவில் முன்பு மாவிளக்கு வைத்து, அதன் நடுவே சிறுமியை அமர வைத்து சுற்றி வந்து பெண்கள் பாட்டுப்பாடி கும்மி அடித்தனர். நேற்று அதிகாலையில் கிராம மக்கள் சிறுமியை, அழைத்துக்கொண்டு ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றுக்கு சென்றனர். 


திண்டுக்கல்லில் நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படும் சிறுமி - 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு

அந்த கிணற்றுக்குள் படிகள் வழியாக சிறுமியுடன் இறங்கினர். அங்கு கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டனர். அவை பந்துபோல மிதந்தது. அதன் மீது மண் கலயத்தை வைத்து எண்ணெய் ஊற்றி திரி வைத்து நிலா பெண்ணான சிறுமி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தவுடன், கிராம மக்கள் ஊர் திரும்பினர். அந்த விளக்கு 7 நாட்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.  100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வினோத வழிபாட்டை கோட்டூர் கிராம மக்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget