மேலும் அறிய

"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி

டெல்லியில் இருந்து வந்தாலும் சரி இங்கே லோக்கலில் இருந்து வந்தாலும் சரி 2026ல் திமுக தான் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் உதயநிதி உறுதியாக தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் : டெல்லியில் இருந்து வந்தாலும் சரி இங்கே லோக்கலில் இருந்து வந்தாலும் சரி 2026ல் திமுக தான் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக பேசியுள்ளார்.

மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்:

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 10 மணியளவில் அரசுத்துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இன்று பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வருகை புரிந்த துணை முதலமைச்சர் உதயநிதிக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் பழனி புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

உற்சாக வரவேற்பு:

 விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எம் எல் ஏக்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளரான பிவிஆர் சு. விஸ்வநாதன், விழுப்புரம் நகர்மன்றத்தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர் 

இதனை தொடர்ந்து அரசூர் பகுதியில் கொம்பு வாத்தியம், தாரை வாத்தியம், மங்கல இசை, ஆடல் பாடல் என நிகழ்ச்சி துணை முதலமைச்சர் வருகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்ட செயலாளர் செயலாளர் உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் துணை முதல்வருக்கு வெள்ளி வாள் வழங்கி வரவேற்றனர்.

தொடர்ந்து திருவெண்ணைநல்லூரில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் உட்கார்ந்து எழுதி கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பின்னர் அவர் மேடையில் பேசுகையில்,

"அனைத்து தொகுதிகளிலும் கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க தலைவர் அறிவித்து திறந்து வைத்து வருகிறார். அந்த வகையில் இங்கு நான் கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளேன். 2003ம் ஆண்டு 21 ஆண்டுகளுக்கு முன் தளபதி நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தேன். அப்போது தான் பொது வாழ்க்கையில் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தேன். இன்று விளையாட்டுத்துறை அமைச்சராகி இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்கும் வாய்ப்பை பெற்றேன்.

திராவிட மாடல் அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் என முத்தான 5 திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை கொடுத்தீர்கள். 

2026 தேர்தலிலும் வெற்றி பெறுவோம்:

அரசு நலத்திட்டங்களை பெற்ற ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பயனாளியை தொடர்பு கொண்டு நம் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்குவோம். கலைஞரின் சிந்தனைகளை, எழுத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவே கலைஞர் சிலைகள் திறக்கப்படுகிறது. 

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று தலைவரை முதல்வர் நாற்காலியில் உட்காரவைப்போம். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, மிகப்பெரிய கூட்டணி அமைத்து வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம். முதல்வரை மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம். அந்த வகையில் நாம் தேர்தல் பணியாற்றுவோம்" என துணை முதலமைச்சர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget