Coimbatore: கோவையில் பாதுகாப்பு தொழில் நிறுவனம் - அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் தகவல்!
கோவையில் பாதுகாப்பு தொழில்நிறுவனம் தொடங்க வலிறுத்தியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் 4 நாட்களுக்கு பொதுவிவாதம் நடைபெற்றது. சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு இன்று பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்காக இன்று முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் முதலில் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது கோவையில் பாதுகாப்பு தொழில் நிறுவனம் அமைக்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காடுவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் தற்போது தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொழிற் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவது முக்கியமான ஒன்று. அந்த நேரங்களில் நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
https://t.co/P2m3d8H41q
— TN DIPR (@TNDIPRNEWS) April 6, 2022
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நீர்வளத்துறை மானிய கோரிக்கை - நேரலை.#CMMKSTALIN | #TN_Assembly_Demand_2022 |#TNDIPR |@CMOTamilnadu @mkstalin @katpadidmk @mp_saminathan
இதைத் தொடர்ந்து விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது, ”வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் 68.375 கோடி ரூபாயில் 2.05 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் போடப்பட்டுள்ளது.
துபாய் பயணத்தில் 12,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டி.பி வேர்ல்டு, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. துபாயில் எரிசக்தி, சரக்கு போக்குவரத்து திட்டங்கள், மின்னணுவியல் திட்டங்களில் அதிக அளவிலான முதலீட்டை ஈர்க்க உரையாடினேன். விரைவில் இந்த முதலீடு தொடர்பாக பணிக்குழு அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்